பக்கம்:புதையலும் பேழையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gມສທuà 125

(தானக மாடம்") எனக் குறித்தார். இம்மாடமும் நீர் நிலைகளின் நடுவிலும், நீர்நிலைக்குள் நீட்டியும் கட்டப்பட்டிருந்தது என அறி கின்றோம். இதனை அத்திருத்தக்க தேவரே,

"மகளிர் நீர்நிலையில் கட்டப்பட்ட மாடத்தின் மேல் அடுக்கில்'ஏறி அங்கிருந்து நீரில் பாய்வர். நீர் ததும்பித் தெறிக்குமாறு பாய்ந்து நீராடுவர். இக்காட்சி தோகை மயிற் கூட்டம் வானத்திலிருந்து இறங்குவது போன்று இருந்தது'

. - என வண்ணித்தார்.

இக்காலத்தும் நீர் நிலைக்குள்ளும், நீர் நிலைக் கரை களிலும் பல நிலை மாடங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இதுபோது திருவையாற்றில் அரசர் தமிழ்க் கல்லூரியாகத் திகழும் கட்டடம் மூன்று அடுக்கு மாடக்கட்டட்ம். இம்மாடம் காவிரி யாற்றின் கரையில் - காவிரியாற்றுக்குள் நீட்டிக் கட்டப் பட்டுள்ளது. இம்மாடம் அரச கன்னியர்க்காகச் சரபோசி மன்னனால் கட்டப்பட்டது. அக்காலத்தில் கன்னியர் இம்மாடத் கிளிருந்து பாய்ந்து நீராடியிருப்பர். இக்காலத்தில் கல்லூரிக் காளையர் பாய்ந்து நீராடுகின்றனர்.

எழு நிலை மாடம்.

நெடுமையாய் உயர்ந்த நிலையில் கட்டப்படும் மாடம் "நெடு நிலை மாடம்’ என்று குறிக்கப்பட்டது, முன்னர் நெடு நிலைக்கந்து', 'நெடுநிலைக் கோட்டம்’ எனப்பட்ட கட்டுகளின் வளர்ச்சியே இந்த நெடுநிலை மாடம் எனலாம், அடுக்கடுக்காக மேல் நிலையில் கட்டப்பட்டதால் இது நிரைநிலை மாடம் எனவும் குறிக்கப்பட்ட து.

இவ்வாறு நெடுநிலை மாடம்" என்றும் நிரை நிலைமாடம்’ என்றும் குறிக்கப்படும் மாடம் ஏழு நிலைகளை - அடுக்குகளைக் கொண்டதாய்க் கட்டப்பட்டது. - .

ஏன் ஏழு நிலைகளில் கட்டப்பட்டது?

1 'தானக மாடம் ஏறித் தையலார் ததும்பப் பாய்வார் -

வானகத் திழியும் தோகை மடமயிற் குழாங்கள் ஒத்தார்" -

< - - சீவ. சிந் 2858,