பக்கம்:புதையலும் பேழையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$26 புதையலும்

இப்படியொரு வினா என் உள்ளத்தில் எழுந்தது இவ்வினாவிற்கு விடை காணுதல் ஒரு நல்ல ஆய்வாயிற்று.

இவ் ஆய்வினால் புலப்பட்ட விளக்கங்கள் பழந்தமிழ்ப் பெருமகனின் வாழ்வியல் செம்மையை உலக அளவிலும் உயர்த்திக் காட்டுவன ஆகின்றன.

இக்காலத்துப் பொறியியல், அறிவியலை மணந்து பெற்றெடுத்து வளர்த்துவரும் கட்டிடக் கலை அம்மாடியோ என வியக்கத்தக்கது. மூக்கின் உச்சியில் சுட்டு விரலைச் சேர்த்து அகல் விழிந்து வியக்கத் தக்கது. 300 மாடிகள் கொண்டனவாகப் பல்வகைக் காலநிலைக்கேற்ற அமைப்புகளுடன் - நினைத்தால் நினைத்தபடி நிகழ்த்தும் பொறியமைப்புகளும் கொண்டவை இக்கால மேல் நாட்டு மாடங்கள். ஆயினும், இவை நம் பழந்தமிழ் நாட்டு ஏழு நிலை மாடத்திற்கு ஈடாகா என்றால் கேட்போர்க்கு நகைப்பே தோன்றலாம். சொல்வோனை ஏளனமாக எண்ணத் தோன்றும். ஆனால், இஃது உண்மை என்பதைக் காட்டுவதும் நாட்டுவதுமே இக்கட்டுரை.

மேல்நாட்டுப் பலநிலை மாடங்கள் இயற்கை வாய்ப்புகளை யும், வனப்புகளையும், வாழ்வுத் துணைகளையும் செயற்கைப் பாங்கில் ஏற்படுத்தித் தருவன. அவை உடலுக்கு நிலைப்பான நலத்தைத் தரும் என்று உறுதியாகக் கூற இயலாது. பழந்தமிழ் நாட்டு எழுநிலை மாடம் இயற்கை நலங்களை இயற்கைப் பாங்கு சிதையாமல் அப்படியே துய்க்கச் செய்யும் அமைப்புகளைக் கொண்டது. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றபடி இயற்கையின் பயனைக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டது.

இவ்வமைப்புதான் புதுமையும் பெருமையும் மிக்கது. எழுநிலை மாடம் என்பது ஏழு அடுக்கு மாடி வீடு. ஒவ்வொரு அடுக்கும் முன் குறிக்கப்பட்டது போன்று மேல் வளைவாய் ஒட்டப்பட்டு, மேல்தளம் மட்டமாய்ப் பூசப்பட்ட ஒட்டுக் கட்டடம். முதல் அடுக்காம் கீழ் தளம் சரக்கு அறை. இது வாழ்வுக்கு வேண்டப்படும் அடிப்படைப் பொருள்கள் நிறைந்த பண்டாரம். மேன்மேல் ஆறு மாடிகள் எழுவானேன்?

தமிழர் ஒராண்டுக் காலத்தை இரண்டிரண்டு திங்கள் களாகப் பகுத்து ஆறு பருவங்களாகக் கொண்டனர்: