பக்கம்:புதையலும் பேழையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 புதையலும்

"ஏரணி அமைந்த எழுநிலை நல்வினை

நீரணி மாடம்" -என்றார். (இங்கு குறிக்கப்படும் நீரணி மாடம் முன்னர் கண்ட படகு அன்று.)

'அகிற்புகை வெண்மையாக ஆவிபோல் பெருகி உள் ளிடம் எல்லாம் நிறைந்து விம்மி வெளிவரும் மாடம் -என்பதைச் சீவக சிந்தாமணி (2840)

"இன்னகில் ஆவி விம்மும் எழுநிலை மாடம்' -என்கிறது

'இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடம்’ -என்னும் முல்லைப்பாட்டிற்குத் (86) 'தனக்குள்ள இடமெல்லாம் பொன்னா லும் மணியாளும் சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழு நிலையினை யுடைய மாடம்" என்று நச்சினார்க்கினியர் உரைவிளக்கம் தந்துள்ளார்.

இம்மாடங்களில் அரமியம் என்னும் நிலாமுற்றங்கள் இருந்தன என்பதை,

"நிரைநிலை மாடத்து அரமியம்" என்று மதுரைக் காஞ்சியும் (451) சிலப்பதிகாரமும் (2:27) ஒன்று போலச் செப்புகின்றன. நிலாமுற்றங்களே அரமியம் என்பதை,

'அரமியம் நிலா முற்றம் ஆகுமென்ப" என்னும் சேந்தன் திவாகரத்தாலும் அறியலாம். -

மாடத்துச் சுவர்களில் பூவேலைப்பாடுகள் ஒவியமாகவும் சுதையாகவும் வடிக்கப்பட்டிருந்தன. மலர்க்கொடிகள் படர விடப்பட்டிருந்தன. பெரிய சுடுமண் தொட்டிகளாம் தாழிகளில் நீர் நிரப்பப்பட்டு நீர்ப்பூக்களாகிய குவளையும் செங்கழுநீரும் வளர்க்கப்பட்டன. இது இக்காலத்துத் தொட்டிச் செடி வளர்ப்பு போன்றது. மாட வளைவுகளில் முத்து மாலைகள் முறையாக நாற்றித் தொங்கவிடப்பட்டிருந்தன. பருவ நிலைக்கேற்பக் காற்றைப் பெறவும், பெறாமல் அடைக்கவுமாகப் பல்வகையான மான்கண் காலதர், சாளரம், கால்போகு பெருவழி, நேர்வாய்க் கட்டளை (சாலேகம்) என்னும் பலகணி வகைகள் அமைக்கப்

1 பெருங் : 88