பக்கம்:புதையலும் பேழையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 புதையலும்

தைக் கோசிகன் என்னும் மறையவன் பேச்சாகச் சிலம்பு பேசு கின்றது. இவ்வடிகளைச் சிலம்பின் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், . . .

"எழுநிலத்தையுடைய மாடத்து நாலா நிலத்து ஒரு படுக்கையமைந்த சேக்கையிடத்தே மயங்கி வீழ்ந்த செய்தியும்"

-என்று விளக்கியுள்ளார். இவ்விளக்கங்கொண்டு நெடுநிலைமாடம் என்பது எழு நிலை மாடம் என்பதையும் அதன் இடைநிலம் என்பது நான்காவது மாடி என்பதையும் அறியலாம். நெடு நிலை -எழுநிலை; 'இடைநிலம்-நாலா நிலம்' என மனையறம்படுத்த காதையிலும் குறிப்புரை எழுதியுள்ளார். ... . . .

மாதவி கோவலனைப் பிரிந்து மயங்கியது வைகாசித்திங்கள். அஃதாவது இளவேனிற் பருவத்தின் இறுதி நாள்கள். எவ்வா றெனில், இந்திரவிழா சித்திரைத் திங்கள் முழுமதியில் தொடங்கி 28 நாள்கள் நிகழும். இறுதி விழாவாகக் கடல் விளையாட்டு விழா நிகழும். அவ்விளையாட்டைக் காணச்சென்ற போதுதான் கோவலன் மாதவி ஊடலுக்குக் காரணமான கானல் வரி நிகழ்ந் தது. எனவே, வைகாசித்திங்கள் இளவேனிற் பருவத்தில் மாதவி நான்காவது மாடியில் இருந்தாள் என்றாகிறது. எனவே, இள வேனிற் பருவத்தில் துங்குவதற்கென அமைக்கப்பட்டது நான் காவது நிலம் என்றாகிறது. .

மேலும்,

திருமணம் முடித்துக்கொண்ட கண்ணகியும் கோவலனும் இன்பம் நுகரக் கொண்ட இடத்தைச் சிலப்பதிகாரம்,

'கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும் மயன் விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்தார்கள் .

多 - எனக் குறிக்கின்றது. அந்நாள்கள் இளவேனிற் பருவத்தின் இறுதி நாள்கள். அடுத்து

1 -சிலம்பு :2:11 - 13.