பக்கம்:புதையலும் பேழையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 புதையலும்

"அவர் காதல் மிகுதலாலே இடைநிலத்து (நான்கா வது) நின்றும் மேல் நிரைத்து வகுத்த நிலங்களில் மணத்தினையுடைய மலர்வாளியோடே கர்மன் வீற்றிருக் கும் மேல் நிலமாகிய (ஐந்தாவது நிலம்) நிலாமுற்றத்தின் மேல் ஏறியென்க' - என்று விளக்குகின்றது.

எனவே, ஐந்தாம் நிலம் முதுவேனில் பருவத்திற்கு உரியது.

இதற்குச் சான்றாக மேலும் ஒரு குறிப்பு கிடைக்கின்றது. கூதிர்ப் பருவத்தில் காதலரைப் பிரிந்த மாதர் பிரிவுத் துன்பத் தால் நொந்து ஊது உலை போன்று பெருமூச்சு விட்டு,

"வேனிற் பள்ளி மேவாது கழிந்து

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து' ஒடுங்கினராம். இவ்வடிகளில் வேனிற்பள்ளியினின்றும் மேவாது” என்று கூறப்பட்டுள்ளதால் அதன்மேல் மேவுமாறு அமைந்தது ஐந்தாவது நிலம். அது கோடைப்பருவத்திற்கு-முது வேனிற் பருவத்திற்குரிய மாடியாகும். இக்குறிப்பாலும் ஐந்தாவது நிலம் முதுவேனிற் பருவத்திற்குரிய மாடி ஆகின்றது. (இளவேனிலும் முதுவேனிலும் வேனில்’ என்று குறிக்கப்படுவது உண்டு. வேனிற்பள்ளி என்பது போன்று கூதிர்ப்பருவத்திற்குரிய மாடி 'கூதிர்ப்பள்ளி’ எனப்பட்டதை மேற்குறிக்கப்பட்ட இரண்டாம் அடியில் காண்கின்றோம். இவ்விடத்தும் அடியார்க்கு நல்லார்,

'இளவேனிற்காலத்திற்கு அமைந்த நிலாமுற்றத்தின் (மேல்) மேவாது ஒழிந்து கூதிர்க்காலத்திற்கு அமைந்த இடைநிலத்து ஒடுங்கி -என்று விளக்கினார். இங்கு இடைநிலம்’ எனப்பட்டது நான்காவது நிலமாகிய இளவேனிற் பள்ளிக்கும் இரண்டாவது நிலமாகிய கார்ப்பள்ளிக்கும் இடைப் பட்ட மூன்றாவது நிலமாகும். வேனிற்பள்ளி மேவாது கழிந்து” என்பதில் "கழிந்து" என்றதை நோக்கவேண்டும். 'கழிந்து' என்பது இறங்கி என்று இங்கு பொருள்படும். கீழி றங்கிக் கூதிர்ப்பள்ளிக்கு வந்ததாகக் குறிக்கப்பட்டதால் நான்கா வதன் கீழ்நிலமாகிய மூன்றாவது நிலம் கூதிர்ப்பள்ளிக்கென அமைந்ததாகும். -

1. சிலம்பு : 3 : 60, 61.