பக்கம்:புதையலும் பேழையும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 135

அடுத்து,

இரண்டாவது நிலம்பற்றிக் காணலாம்.

சீவக சிந்தாமணியில் மன்னன் சீவகன் தன் உரிம்ை மகளிரொடு முதுவேனிற் பருவத்தில் விளையாடியமை குறிக்கப் படுகின்றது. அக்காலம் முதுவேனிற் பருவத்தின் இறுதிக்காலம்.' அடுத்து, கார்ப்பருவம் தொடங்கும் அறிகுறியாக மழை தொடங் கும் அறிகுறிகள் தொடங்கின. முகில் இடித்து முழங்கியது. இடிகேட்டு அஞ்சிய உரிமை மகளிர் மன்னனைத் தழுவிக் கொண்டினர். கார்ப்பருவம் தொடங்கியதை உணர்ந்த மன்னன் மகளிருடன், . -

முதுவேனில் பள்ளியினின்றும் இறங்கிக் கீழ்நிலை யாகிய இரண்டாவது அடுக்கில் இனிய அகிற்புகை மணக்கும் படுக்கையில் அமைந்தான். இதனை,

  • இழிந்து கீழ்நிலை இன்னருஞ் சேக்கைமேல்' மகிழ்ந்தான் என்று கூறியது சிந்தாமணி, இதுகொண்டு அடித் தளத்திற்கு மேல் உள்ள இரண்டாவது நிலம் கார்ப்பருவ மாடி என்று கொள்ள முடிகின்றது.

அதே சிந்தாமணி முன்பணிப் பருவத்தில் சீவகன் தங்கியதை,

'மாமதி உரிஞ்சும் ஒண்பொனின்

மாடக் கீழ்நிலை மகிழ்ந்து வைகினார்” -என்று குறிக்கின்றது. "மாமதி உரிஞ்சும் மாடம்” என்பது உயர்ந்து மேலிருக்கும் ஏழாவது நிலத்தைக் குறிக்கும். அம்மாடத்தின் கீழ் என்பதால் ஆறாவது நிலம் ஆகிறது. எனவே, ஆறாவது நிலம் முன்பணிப் பருவ நிலமாகிறது. பின்னே குறிக்கப்படும் கருதுக்களாலும் இக்கருத்து வலியுறும்.

எஞ்சி நிற்பது ஏழாவது நிலம். அது பின்பணிப்பருவ நிலம் ஆக வேண்டும். -

TFs:F 2878 : சீவக. சி: 2689.