பக்கம்:புதையலும் பேழையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - புதையலும்

இச்சான்றுகளால்,

கீழ்த்தளம் - சரக்கு அறை; இரண்டாவது நிலம் - கார்ப்பருவமாடி: மூன்றாவது நிலம் - கூதிர்ப்பருவ மாடி:

நான்காவது நிலம் - இளவேனிற்பருவ மாடி, ஐந்தாவது நிலம் - முதுவேனிற்பருவ மாடி, ஆறாவது நிலம் - முன்பணிப்பருவ மாடி, ஏழாவது நிலம் - பின்பணிப்பருவ மாடி

~5T or வரையறை செய்து கொள்ள முடிகின்றது. இவ்வரையறைக்குப் பல உரை யாசிரியர்களது கருத்துரைகளும் முத்திரையிடுகின்றன.

பருவகாலப் பக்குவப் பள்ளியறைகள்.

ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு அடுக்கு என்பது பெயரளவில் மட்டும் ஒதுக்கப்பட்டது அன்று. ஒவ்வொரு மாடி யும் பருவத்தின் தட்ப, வெப்ப நிலைக்கேற்ற கட்டட அமைப்பைக் கொண்டது. பருவத்திற்கு ஏற்ப இயற்கையில் தட்பமும் வெப்ப மும் எழும் அன்றோ? அவற்றை உள்ளே உறைவோர்க்கு நலம் பயக்கும் அளவில் கொடுக்கவும், தீமை தராத வகையில் தடுக்க வும் வாய்ப்பாக ஒவ்வொரு நிலமும் - மாடியும் அமைக்கப்பட்டி ருந்தது. எழுநிலை மாட த்தை உருவாக்கியோர் வெறும் கல்லடுக் கும் கொத்தர் அல்லர். சிற்ப நூல் அறிவில் தேர்ந்த அறிஞர். அன்னார் ஆய்ந்து வகுத்து அமைத்தது எழு நிலை மாடம்.

"நூலோர் சிறப்பின் முகில்தோய் மாடம்"

- என்று சிலப்பதிகாரம் (14 : 97) குறிக்க சிற்ப நூல் வல்லோரானே சிறப்பித்துச் செய்யப்பட்ட உயர்ந்த மாடங்கள்" என்று உரை வகுக்க மேம்பட்டு விளங்கியவை எழுநிலை மாடங்கள்.

பருவத்திற்கு ஏற்ற கட்டட அமைப்பு மட்டும் அன்று.

அடுக்குப் பள்ளியறைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.