பக்கம்:புதையலும் பேழையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேை ழயும் . 137

இன்பம் துய்க்கின்ற எழில்மிக்க குமரரும் குமரிகளுமாம் கணவர், மனைவியர் மீன்கொடியையுடைய மாரவேளது (மன்மதனது) படைகள் எனப்படுவர். அன்னார் பருவத்திற்கும் நாளுக்கும் நேரத்திற்கும் ஏற்பப் புகர் அறுகோலம்' செய்து கொள்வர். புகர் அறுகோலம்' என்றால் ஒரு சிறு புள்ளி அளவு குறையும் அற்ற ஒப்பனை(அலங்காரம்) என்பது பொருள். இவ்வாறு கோலம் கொள்ளுதல் அடியார்க்குநல்லாரால்,

'அக்காலத்திற் ஏற்பன உடுத்தும், முடித்தும், பூசியும், பூணுதல்”

- என்று விவரிக்கப்பட் டுள்ளது.

பருவத்திற்கு ஏற்றதும் அப்பருவத்தில் நேரத்திற்கு ஏற்றது மான உடைகளை உடுப்பர். பருவத்திற்கு ஏற்ற கூந்தல் முடியிட்டு, பொருத்தமான மலர்களை முடிப்பர். ஏற்ற மணப்பொருள்களைப் பூசிக்கொள்வர். ஏற்ற அணிகலன்களை அணிந்து கொள்வர். எனவே, ஒவ்வொரு அடுக்கிலும் அததற்குரியஉடைகள்,கொண்டை கள், மலர்கள், மணப்பொருள்கள், பூச்சுப் பொருள்கள். அணி கலன்கள், இசைக்கருவிகள் கலைப் பொருள்கள் தட்டுமுட்டுப் பொருள்கள் முறையாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை முறையே நாமும் காணலாம்.

சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கியங்கள் காட்டும் கருத்து வழியே அடுக்கடுக்காக ஏறிப் பள்ளியறைகளைக் காண் போம். தும்மாமல், கனைக்காமல், ஒசையிடாமல், பெருமூச்சுவிடாமல் காண வேண்டியவற்றை மட்டும் கண்டு வருவோம்.

இரண்டாவது நிலை மாடம்.

எழுநிலைமாடத்தைக் காண நாம் கார்காலத் கார்ப்பருவப் தில் புறப்பட்டிருக்கின்றோம் என்பதை நினைவில் பள்ளியறை. கொள்ள வேண்டும். மாடத்தின் வெளியில் நின்று பார்த்தாலே ஏழாவது மேல் அடுக்கில் கார்முகில் கள் படிந்திருப்பது தெரிகின்றதன்றோ? அதனால்தான் அவ்

T "tpag e &

- கோலம் கொள்ளும் என்பதுபோல்' - பு:கரது - சிலம்பு : 8 10, 11.