பக்கம்:புதையலும் பேழையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 புதையலும்

அடுக்கில் கார்ப் பள்ளியினை அமைக்காமல் கீழ் அடுக்கைத் தேர்ந் துள்ளனர் போலும். மக்களுக்குப் பெரும் இடையூறு இன்றித் காதலருக்கு இனிய குளிரைத் தரும்பருவம் ಆಲ್ಟಅಹಿ೨5T தான் அடுக்கில் புகும் வாயில் மிக உயரமும் இன்றி, மிகத் 5Tಳ್ಲ!! இன்றி அளவாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கதவுகளைப் uT16ುಖ யிடுக! பொருந்துவாய் தெரியாமல் மூடும் நிலையில் உள்ளன. கதவுகளின் பலகைகள் ஈரத்தை வாங்கிக்கொள்ளாத தைல மரங் களால் ஆகியிருப்பவையாகக் காண்கின்றோம். உள்ளே புகுகின் றோம். கிழக்கிலும் மேற்கிலும் மட்டும் அளவான புழைகளை உடைய சாளரங்கள் காட்சியளிக்கின்றன. அவற்றையும் மூடுவதற்குச் சிறு கதவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாளரங்களில் மணிமாலைகள் தொங்குவன கண்களைக் கவர்கின்றன அன்றோ?

அதோ, மணிக்கால் கட்டில் கிடக்கின்றது. அதன்மேல் மெத்தென்ற அணை கிடக்கிறது. அதன் மேல் பட்டு விரிக்கப் பட்டுள்ளது. அதன்மேல் மலர்கள் துவப்படவில்லை. ஒரு மூலையில் மெல்லிய அகிற்புகை எழுந்து படுக்கையில் படிந்து மணக்கிறது. படுக்கைக்குக் கதகதப்பு மூட்டுகிறது. அதோ, அப்பேழையில் சிவந்த நிறப் பட்டாடைகள் எழிலோடு உள்ளள. அவற்றின் அண்டையில் மேகலை மின்னுகின்றது. பவள மாலை யும், செம்மணி பதித்த அணிகலன்களும் நிறைந்துள்ளன. செம்மை நிறம் பொருந்திய குடசம், செங்கூதாளம், குறிஞ்சி மலர் கள் கொய்து வைக்கப்பட்டுள்ளன.

மகளிர் கொங்கையில் பூசிக்கொள்ளக் குங்குமக் குழம்பு உள்ளது. சிவந்த கொடுவேரி என்னும் மலரால் கட்டிய மாலை உள்ளது. மேனியில் பூசிக் கொள்ள மணக்கும் சிந்துரப்பொடி உள்ளது." 1

-இவையெல்லாம் தம்மைக் கொள்வார் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கிடக்கின்றன. எல்லாம் சிவப்பு. நீர் சேர்ந்த குழம்பு ஆன பூச்சுப் பொருள்களைக் காணவில்லை. மழைக்காலம் அன்றோ? யாவும் பொடிகளாகவே உள்ளன. -

1. "குங்கும வருணம் கொங்கையின் இழைத்துங் செங்கோடு. வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் அந்து கிர்க் கோவை அணியொடு ஆண்டு'-சிலம்பு : 14 90-98,