பக்கம்:புதையலும் பேழையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - புதையலும்

'அன்னோர் வரும் நேரம் போலும். அன்னோர் வந்து கூதிர்ப்பள்ளிக் குறுங்கண்ணை அடைத்துத் தம்மை மறக்கப் போகின்றனர். நாம் நம் பயணத்தை மறக்காமல் மேலே செல்வோம்.

நான்காவது நிலை மாடம்.

இந்த இளவேனில் அடுக்கில் ஏறிய உடனே இளவேனிற் ஓர் உவகைப்பெருக்கு உடலில் ஊர்கிறது. பள்ளியறை. இன்பக் கிலுகிலுப்பு எவருக்கும் எழும். இதனை ஒரு தனியமைப்பான கலைக்கூடம் எனலாம். எவ்வளவு பெருவளம் விளங்குகின்றது. இப்பள்ளியில் அவ்வளவு துணுக்கங்களையும் காண நேரம் இல்லை. குறிப்பாகக் கண்டு மீளலாம்.

மேல்தளம் உயரமாக உள்ளது. சுவரெல்லாம் வெண்சுதைப் பளபளப்பு: வழவழப்பு. சுவரில் பல்வகைப் பூத்தொழில்கள் மின்னுகின்றன. சுவர்களில் எங்கும் மான்கண் காலதர்கள்’ உள்ளன. மணம் வாய்ந்த தென்றல் நேரம் பார்த்து இன்னிசை யோடு நுழைதற்கு ஏற்ற சிறு துளைச் சாளரங்கள் உள்ளன.

அவை,

‘மாலைத் தாமத்து மணி நிறைத்து வகுத்த

கோலச் சாளரங்கள்'

வீதி உலாக்களையும் இயற்கைக் காட்சிகளையும் கண்டு உவக்க வாய்ப்பாகப் பார்வைப் பக்கத்தில் அமைந்த 'நேர்வாய்க் கட்டளைகள்' என்னும் சாலேகங்கள் உள்ளன. இவை திறந்த பாங்கின. தென்றல் காற்றைத் தருவதற்கென்றும் அமைக்கப் பட்டவை இவை. கட்டடத்தில் வெளிப்புறம் புடைப்பாகத் தேரின் தோற்றத்தில் அமைந்தவை நேர்வாய்க் கட்டளைகள். கட்டடத் தின் இரு பக்கத்தும் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

1 சிலம்பு ; 2 : 22, 28.

2 "வேனிற் பள்ளித் தென் வளி தருஉம்

நேர்வாய்க் கட்டளை திரியாது" - நெடு. வn ; 81, 52.