பக்கம்:புதையலும் பேழையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 145

களும் பல பாங்குகளில் உள்ளன. பிற பொன், மணி, அணிகளும் சந்தனப் பேழைகளில் புன்முறுவல் காட்டுகின்றன.

வடக்கு மூலையில் இமய மலைக் கல்வட்டம் பதிக்கப்பட் டுள்ளது. அது வடநாட்டாரிடமிருந்து வாங்கிய உயர்ந்த, நல்ல நிறம் வாய்ந்த வட்ட வடிவமான கல். பக்கத்தில் பொதியமலைச் சந்தனக் கட்டைகள். இக்கட்டைகள் அக்கல்லில் தேய்த்து அரைக் கப்பட்டுப் பூசிக்கொள்ள எடுக்கப்படும். பொதியில் சந்தனம் குளுமையின் தாய். அத்துடன் இமயத்துக் கந்தகக் கலப்புடைய கல் தேய்ந்து உடலுக்கு நலத்தையும் மெருகையும் ஏற்றும். இவை இரண்டையும் இணைத்த தமிழர்தம் பாங்கும் திறனும் எண்ணிச் சுவைக்கத்தக்கன. இமயக் கல்லானாலும் பொதியில் மரம் தேய்த்து விடும் என்பதைக் காட்டும் கருத்தில் அமைத்தனர் போலும். வன்மையை மென்மையாலும் வெல்லத்தெரிந்தவரன்றோ தமிழர்!

மருகிய சந்தனத்தை ஆடவர் மார்பில் பூசிக்கொள்வர். பெண்கள் மார்பிலும் தோளிலும் பூசும் தொய்யில் குழம்பு காலில் தீட்டிக்கொள்ளும் செம்பஞ்சுக் குழம்பு நிறைந்த பொன் கிண்ணிகள் உள்ளன. முழு உருவத்தையும் காட்டும் பல்வகைப் பளிங்கு ஆடிகள் ஆங்காங்கே ஒழுங்காக நேருக்கு நேர் பொருத்தப்பட்டுள்ளன.

இஃதோ ஒவியம் தீட்டிய உறையிடப்பட்டு, செழுங்கோட் டில் மலர் சூடி, மைத்தடங்கண் மணமகளிர் போல் வனப்பெய்திய: சகோட யாழ் படுத்திருக்கிறது. பல இயங்களும் (இன்னிசைக் கருவிகள்) பார்க்கின்றன. தோற்கருவிகள் தூங்குகின்றன.

மேலும் உள்ள கலை அமைப்புகளைப் பின்னொருமுறை பார்ப்போம். உள்வழியாகப் பின்னே பார்த்தால் நிலா முற்றம் தெரிகின்றது. முன் இருஅடுக்குகளிலும் இல்லாத அமைப்பு இது. இளவேனிற் பருவத்துச் சித்திரை நிலவு சித்திரக்குலவு அன்றோ? அதைச்சுவைக்க இங்கே "மணிக்கால் அமளி கிடக்கிறது. இக்

1. "வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்து

தென்மலைப் பிறந்த சந்தனம் மருகும்"--சிலம்பு. 8 : 87, 88. 'வடவர் தந்த வான் கேழ் வட்டம் குடபுல உறுப்பின் (சந்தினம்) கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந் தனிகுவம்'-அகம்: 339; i3-18,

புே, 10