பக்கம்:புதையலும் பேழையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 புதையலும்

கட்டிலின் அமைப்பு கச்சுக் கட்டிவின் அமைப்பில் வேறுபட்டது. இதிலும் கலையமைப்பின் நிறைவு நிற்கிறது. நிலாமுற்றத்தின் மேலே முல்லைக்கொடி பந்தலிட்டுள்ளது. இவ்விடத்தில் தான் 'நிலவுப் பயன் கொள்வர்.

பக்கத்தில் நீர்த் தொட்டியில் குவளையும் செங்கழுநீரும் மலர்ந்துள்ளன. அதன் பக்கத்தே வரிப்பந்தாடும் மேடை உள்ளது; கழங்காடும் தெற்றி உள்ளது.

இளவேனிலில் இங்கேயே உறையும் அன்னோர்’ நம் வருகையால் ஒதுங்கியுள்ளனர். இனியும் அவர்களைக் காக்கவைப்பின் அவர்கள் உள்ளம் வெடித்துவிடும். அவ்வெடிப் புக்கு இடமில்லாமல் நாம் முதுவேனிற் பள்ளியறையைக் காணச் செல்வோம்.

ஐந்தாவது நிலை மாடம்.

நாம் படியில் ஏறுகிறோம். கோடை வெப்பம் முதுவேனிற் நம் உடலில் ஏறுகிறது. பள்ளிக்குள் புகுந்தால் பள்ளியறை. வெப்பம் புறமுதுகிட்டுக் கப்பமும் கட்டி ஒடும்

இம் முதுவேனில் அடுக்கு இளவேனில் அடுக்கு போன்றே அமைந்துள்ளது. ஒரு மாற்றம்; அங்கே முகப்பின் நடுவில் அமைந்த சாளரம் இங்கே இல்லை காற்று போவதற்குத் திறந்த :ெளியாய் வளைவுகளாகக் கட்டப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். இது கால் போகு பெருவழி எனப்படும். கட்டடத்தின் இப்பள்ளியில் வீசும் காற்று தடங்கலின்றிப் போவ தற்குரிய திறந்த வழி இது. இதனை மணிமேகலை,

'சாளரம் ஒழிந்த கால்போகு பெருவழி'

-என்று குறிக்கின்றது. இவ்வமைப்பு, வருங் காற்றினை ஒடவிட்டு வெப்பத்தைக் குறைப்பது போலும். இப்பெருவழியாம் திறந்த கூடத்தில் ஒரு பூவணையை இட்டு மாலைக் காலத்தில் கூடி இருந்து

  1. _5\Ji-ji.Jss .

இக் கால்போகு பெருவழியின் இரு பக்கங்களிலும் பெரும் அறைகள் போன்ற கூடங்கள் இரண்டு எதிர் எதிராக

• عام متحصیات = : ، مدبن ماجہ مبہمے ہمہنمعمیچ

4 மணி 4 , 59,