பக்கம்:புதையலும் பேழையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 147

அமைந்துள்ளன. அவற்றுள் இளவேனிற் பள்ளியைப் போன்றே சாளர அமைப்புகள் உள்ளன. பிற பொருள்களும் அவ்வவ்வாறே உள்ளன. முன் காணப்பட்ட ஆடைகளோடு பாம்பு உரித்துப் போட்ட சட்டை போன்று மெல்லியதாகப் பளப்பளப்பான அறுவை ஆடைகள் உள்ளன. தென்கடல் முத்தும், தென்மலைச் சந்தனமும் நிறைந்துள்ளன. வடபுறக் கூடத்தில் சந்தனக் குழம்பு நிறைந்த தொட்டி ஒன்று உள்ளது. -

'முதுவேனிற் காலத்து ஞாயிற்றுக் கதிரின் வெப்பம்

தாக்குவதால் வெம்பி, இம் மேல்மாடியில் சந்தனக் சேற்றில் குளிப்பது போன்று பூசிக்கொள்வர்; பூசிக் கொண்டு வெப்பத்தைக் குளுமையாக்கிக் கொள்வர். பலவகை மணமலர்கள், வண்டுகள் சூழ உள்ளன. முல்லை. மல்லிகை மாலைகள் நிறைய உள்ளன. மகர யாழ் உள்ளது. கைவினை வல்ல கம்மியர் செய்த ஆலவட்டம்' உறையிடப்பட்டுச் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. மயிற் பீலியும் மண நார்களும் பின்னப் பட்டுக் கலைத் தொழிலோடு அமைந்த இது, பெரிய விசிறியாகும். இதை ஒருவர் நின்று இரு கைகளாலும் பிடித்து வீசவேண்டும்.

இவ்வடுக்கிலும் நிலா முற்றம் அமைந்திருப்பதைக் காண் கின்றோம். இஃதும் நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்’ ஆகும். இங்கும் இளவேனிற் பள்ளி அமைப்பையே காண்கின்றோம்.

தென்புறக் கூடத்தில் முத்துக்களால் அமைந்த அமளி மேல் அன்னோர் இருக்கின்றனர் போலும். ஒசையிடாமல் உயரே ஏறுவோம்.

ஆறாவது நிலை மாடம்,

என் பின்னே ஏறி வருகிறீர்கள் அன்றோ? முன்பணிப் நீங்கள் வருவது தெரியவில்லை. காலைப் பணி பள்ளியறை. மூட்டம் மறைக்கின்றது. முன்பணிப் பருவம் - அன்றோ? எங்கு நோக்கினும் வெள்ளை ஆவி போன்று பனி மூடி உள்ளது. -

1. வேனில் வாய்க் கதிர் வெம்பலின் மேனிலைத்

தேனுலாம் குளிர் சந்தனச் சேற்றிடை' -சீவ, சி. 2663