பக்கம்:புதையலும் பேழையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - புதையலும்

இப்பள்ளி, காலதர் முதலிய சாளரங்கள் இன்றிச் சிறு சிறு புழைகளை ஆங்காங்கே கொண்டு விளங்குவது. அவை வெளிப்புறத்தினின்றும் மேல் நோக்கிய புழைகளாய் உள்ளமை பணிவாடை உள்ளே புக இயலாமல் செய்கின்றன. உள்ளே வைர மணிக் கலங்கள் உள்ளன. ஆடைகள், சலசலக்கும் பட்டு களாக உள்ளன. எளிதில் கிடைக்காத எலிமயிர்க் கம்பலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கணப்புக் கலத்தி லிருந்து வெளிவரும் மணப்புகையால் அக்கம்பலங்கள் சூடு ஊட்டப்பட்டுள்ளன.

"கொங்கு விம்முபூங் கோதை மாதரார்

பங்கயப் பகைப் பருவம் (முன்பனிக்காலம்)

வந்தென எங்கும் இல்லன எலிமயிர்த் தொழில் பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்'ா

-எனத் திருத்தக்க தேவர் பாடினார். மலர்களும் மாலைகளும் அதிகம் இல்லை. சில மலர்களையே கூந்தலில் பெய்து கொள்வர்.

இங்கே புது அமைப்பு ஒன்றைக் காண்கின்றோம். மாடத்தின் கிழக்கில் முன்னே நீட்டிக் கட்டப்பட்ட முற்றம் ஒன்று தெரிகின்றது. இது நிலாமுற்றம் அன்று. இளவெயில் முற்றம். விடியலில் பணி பெய்யத் தொடங்கியதும் குளிர் வாடை நடுக்கும். காலையில் ஞாயிறு கதிர்களை விரித்ததும்,

"வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி

இளநிலா முன்றில் இளவெயில் நுகர”* (சிலம்பு : 14 103, 10.4) இந்தமுற்றத்தில் அமர்வர். அதற்கேற்ற இருக்கைகள் உள்ளன. கதிரவன் தோன்றியதும் மிக உயரத்தில் எளிதாக இளஞ்சூட்டு ஒளியைப் பெறும் நோக்குடன்தான் இந்த முன்பணிப் பள்ளியை ஆறாவதாக அமைத்துள்ளனர். இது பொருத்தமே. பணி கொட்டும் மேலை நாட்டில் வெள்ளையர் வெய்யில் காய்வது போன்று நம் தமிழர் இப்பருவத்தில் காலைக்

1 சீவ. சி : 288) ? சிலம்பு : 14 : 1.08, 104