பக்கம்:புதையலும் பேழையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

4

9

பேழையும்

கதிரில் மூழ்கியுள்ளனர். குளிர்தரும் முத்தும் சந்தனமும் இங்கு தென்படவில்லை. பிற ஒப்பனைப்பொருள்களும் கலைப் பொருள் களும் உள. 'அன்னோர் வெயில்காய வருவர். வருவதற்குள் நாம் மேலே சென்று விடுவோம்.

ஏழாவது நிலை மாடம்.

பின் பனிப் அந்தி வந்துவிட்டது. அதனை முந்திக் பள்ளியறை கொண்டு பணி புகுந்துவிட்டது. ஏழாவது

அடுக்கில் நிற்கின்றோம். பணிக்காலம் கொடியது என்பார்களே அப்பணி இப்பணிதான். உதடுகளை வெடிக்க வைக்கும் பனி இது 'அன்னோர் உதடுகள் வெடிக்கலாமோ?

இப்பணியைத் தடுக்கும் வகையில் சுவரில் சுண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. குறுங்கண்களை உடைய புழையும் அடைப் பான்களால் அடைக்கப்பட்டுள்ளது.

கலைமிகு கட்டில்மேல் சேக்கை மெத்தென்று சிவந்த எலி மயிர்க் கம்பலத்தால் போர்த்தப்பட்டுள்ளது. நெய் ஊற்றித் திரி யிட்ட இரும்பு விளக்கு எரிகின்றது. அரத்தப் பட்டு உடைகள், ஆடைகள் நிறைந்துள்ளன. அவ்வாடைகள்,

"செந்நெருப்பையே உண்ணுவது போன்ற எலி

மயிரால் நெய்யப்பட்ட ஆடைகள், அந்நெருப்பே போலக்

கம்பலங்களால் ஆக்கப்பட்டுள்ளன. 1 இவற்றைச் சீவகன் தாங்கினான் என்று சிந்தாமணி பேசுகின்றது.

தொண்டியிலிருந்து கப்பலில் வந்த,

'அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்

தொகுகருப் பூரமும்' (சிலப்பதிகாரம் 14: 109, 110) உள் ளன. இப்பொருள்கள் பலவகைகளாக விரியும். அவை பின் வருவன:

4 வகை அகில், 36 வகைத் துகில்; 7 வகை ஆரம்: 15 வகை மணம்; 14 வகைக் கருப்பூரம். இவற்றுள்

குளுமையற்ற பொருள்கள் உரிய சிமிழ்களிலும் பேழைகளிலும்

1 'செந்நெ ருப்புணும் செவ்வெ லிமயிர்

அந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்" -சீவ. சி. 2686