பக்கம்:புதையலும் பேழையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 155

'பயில் வடுப் பொதிந்த யாக்கை'

-என்றார் சேக்கிழார். தோயன் மாறன் உடலில் குழியும் கோடும், வாரும் கூறுமாகக் கண்டபடி அமைந்த வடுக்கள் அவ்வீரனது உடலுக்குத் தனி அழகாயின. அவ்வடுக்களினால் அவன்,

"வடிந்த (அழகுபெற்ற) யாக்கையன்’’’ என்று புகழப் பட்டான்.

நாடுகாவலுக்குத் துணைநின்று உதவியமைக்காக மன்னன் பெரும்பொருள் வழங்குவான். போரில் திரங்காட்டி வெற்றி ஈட்டித் தந்தமைக்காகப் பெரும் பரிசுகள் நல்குவான். அவ்வாறு பெற்ற வற்றைக் கொண்டு வறிஞர்க்கும் புலவர்க்கும் பாணர்க்கும் வேண்டியன வழங்கியும் பசி நீக்கியும் "பாண் பசிப் பகைஞன்” என்று போற்றப் பட்டான்.

ஈகைத்துறையில் இவன் ஒருபடி மேலே சென்றவன். புலவர் முதலியோரது வறுமைப் பிணியைக் காணின் அதைத் தீர்த்துவைக்கச் செல்வம் தேட முனைவான். வேலை வடிக்கும் கொல்லனிடம் ஒடுவான். கொல்லனே! வறுமைப் பிணியாளர்க்கு உதவ வேண்டும்; வேலை வடித்துக் கொடு' என வேண்டுவான். பெற்ற வேலொடு நாடு காவலை நாடிச் சென்று பணிபுரிந்து, செல்வம் பெற்று வந்து வறிஞர்தம் வறுமைப் பிணியைப் போக்குவான். இவன் பிறர்க்கென்றே முயன்று செல்வம் ஈட்டினான். இவலை அடைந்த செல்வம் ஒப்புரவிற்கும் ஈகைக் குமே பயன்பட்டது.

திருவள்ளுவப் பெருந்தகை இத்தகைய்ோனைப் (ஒப்புரவு ஆற்றும் பெருந்தகவான எண்ணங்கொண்டவன்) 'பெருந்தகை யாளன்’ என்றார்.

மிருந்து பிரம்.

மரங்களில் மருந்து மரங்கள் உள்ளன. அவற்றது வேர், பட்டை, இலை, பூ, காய், கனி, பால், பிசின் முதலியன மக்கள்தம் பிணிக்கு மருந்தாகப் பயன்படும். அத்தகு மரங்கள்

1 பெரி பு: கண்ணப்பர் 12

2 புறம் : 180 : 6.