பக்கம்:புதையலும் பேழையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ត់ புதையலும்

மக்கள் காண முடியாத இடத்தில் - புக முடியாத காட்டில் அமைந்தால் பயனில்லை. வேண்டும்போது உடனே விரைவாகப் பெறத்தக்க எளிதான இடத்தில் அமைதலே நலம். ஊரின் நடுவே அமைதலே நலம். அத்தகு மரம் மக்களுக்குப் பயன்படுவதைத் திருவள்ளுவர் ஒப்புரவாளனாம் பெருந்தகையாளனது செல்வத் திற்கு உவமையாக்கி,

'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்; செல்வம் பெருந்தகை யான்கண் படின்' "

இக்குறளின் கண் கண்ட இலக்கியமாய் விளங்கினான் ஈரந்துர் கிழான் தோயன்மாறன். இக்குறளில் கூறப்பட்ட உவமை யின் கருத்தில் மட்டுமன்றிக் காட்சியிலும் இலக்கியமானவன் இவன்.

'மரம் பிணிக்கு மருந்தாய் உதவுவது போன்று ஏழையர்க்கு உதவினான் என்ற கருத்தோடு தோற்றத்திலும் மருந்து மரம் போன்று காட்சியளித்தான். . .

மரத்தின் பாலை மருத்துக்கு எடுக்கக் கருவியால் குத்துவர். பால் வடிந்தபின் காய்ந்த இடம் குழியாக வடுப்பெறும். تين إليf போன்று போரில் வேலால் குத்துண்ட தோயன்மாறன் உடலிலும் குழி வடுக்கள் காட்சியளித்தன. மரத்தின் பட்டையை மருந்தாக்கக் கருவியால் வெட்டிச் சீவி எடுத்தபின் அந்த இடம் காய்ந்து வடுப் பெறும். அது போன்று, போரில் வாளால் வெட்டுண்டு புண் பட்டுக் காயம் ஆறி, வார் வாரான வடுக்கள் மாறன் உடலில் காட்சியளித்தன. மருந்து எடுக்கப்படும் மரங்கள் பின்னர் சாறோ பாலோ வடிவதால் காய்ந்து பிசினாக - முடிச்சு முடிச்சாகத் தொங் கும். அதுபோன்று மாறனது உடலிலும் வாள்வீச்சில் சரிந்த தோல்புண் ஆறி முண்டும் முடிச்சமாகத் தொங்கிக் காட்சியளித் திது.

翁 இவ்வாறாத, ஈர்ந்துர்கிழான் தோயன்மாறன் போர்ப் புண்களின் வடுக்களால் 'மருந்து கொள்ளப்பட்ட மரம் போலக் காட்சியளித்தான். r

1 குறள் : 217,