பக்கம்:புதையலும் பேழையும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 புதையலும்

புதிர்கள் சிறிது அதிரக் கேட்கின்றோம்;

கிய முடிச்சுகள் நெகிழக் காண்கின்றோம். து முடி தி

அதிர்விற்கும் நெகிழ்விற்கும் காரணராகத் தமிழக ஆய்வு அறிஞரும் கேரள ஆய்வாளரும் தத்தம் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். >

- தமிழக அறிஞர் புலவர் சி. கோவிந்தராசனார் சிலப்பதி காரத்தை அடியொற்றிய ஆய்வுப் பணியை மேற்கொண்டார். வேங்கைக் கானலின் தடங் கண்டேன்’ என்றார். அக்கானல் சுருளிமலை மீது உள்ளது; அங்குதான் குட்டுவன் எடுத்த கோட்டம் சிதைவுடன் உள்ளது; அவன் வடித்த இமயக் கற்சிலை இதோ என்று படமெடுத்துக் காட்டியுள்ளார்.

கேரள நாட்டிலுள்ள கிரங்கனூர் பகவதி கோவிலே குட்டுவன் எடுத்த கண்ணகிக் கோட்டம்

-இதுதான் கேரள ஆய்வாளரது அறிவிப்பு.

கேரள ஆய்வாளரது முடியும், தமிழ் ஆய்வாளரது முடியும் மாறுபடுகின்றன. இவ்விரண்டையும் ஒருங்கு நினைந்து மேலும் ஆய்வுகள் தொடர்தல் வேண்டும். இரு முனைகளிலும் இவ்வாய்வு நிகழ வேண்டும். இருவகைக் கருத்துகளையும் அவ்வப்படியே துங்கவிட்டு விட்டால் உண்மை வெளிப்படாது. மேலும் ஒரு வரலாற்று உண்மையை நிலைநாட்ட முடியாத எளியவர்கள்’ என்னும் பழிச்சொல் தென்னக ஆய்வாளரைச் சாரும்.

எனவே, ஆய்வு தொடர வேண்டும். ஆய்வின் ஒருமித்த முடிபு, ஒரு கருத்திற்கு அரண்கட்ட வேண்டும். -ன். ஒன்றாகத்தானே இருக்க முடியும்? அவ்வுண்மையை ஏற்றுப் போற்றி மதிப்பது ஆய்வாளரது இயல்பு என்பதும் உண்மையாக வேண்டும். - х -

இந்நோக்கில் இக்கட்டுரை எழுகின்றது. கானலும் கோட்டமும்.

நம்முன் எழுந்துள்ள இவ்வாய்விற்குக் களமாக அமைந்த கருத்துகள் இரண்டு. - .