பக்கம்:புதையலும் பேழையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 புதையலும்

'உரவுநீர் வையை ஒருகரை கொண்டு' மேற்கு நோக்கி நடந்தார். மேடு, பள்ளம் - மலை, பள்ளத்தாக்கு எங்கும் ஏறி இறங்கி நடந்தார். பாண்டி நாட்டு எல்லையை விட்டு நீங்கிச் சேரநாட்டு எல்லையில்,

நெடுவேல் குன்றம் அடிவைத் தேறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ்" 2 பதினான்கு நாள்கள் நின்றார். பின்னர் இயற்கை எய்தினார்.

இவ் அகச்சான்றை அடியொற்றிச் சென்றால் கம்பம் பள்ளத் தாக்கை அடைந்து சிறு மடிப்பு மலைகளில் ஏறி இறங்கிக் ៩ក្រៅ மலையை அடையலாம். இம்மலையே சிலப்பதிகாரம் குறிக்கும் முருகனுக்குரிய நெடுவேள் குன்றம் ஆகின்றது. சுருளிமலை, முருகன் இடங்கொண்ட இடம் என்பதை -

"சுருளிமலை மீதில் மேவும் சீலா - உன்னைத் தோத்தரித்தேன் சுப்பிரமணிய வேலா'

- என்னும் பிற்காலப்

பாட்டும் குறிக்கின்றது.

எனவே, சிலம்பின் கருத்தையொட்டி நடந்து சென்ற தமிழ் ஆய்வாளர் கண்டுள்ள சுருளிமலையே நெடுவேள் குன்றம்" என்பது பொருத்தமாகப்படுகின்றது. இன்று செல்லினும் அஃது ஒத்து வருதல் காணலாம்.

தொடர்ந்து சிலப்பதிகாரம் ஒலிபரப்பும் கருத்து இதனை உறுதிப்படுத்துகின்றது.

மலைவளங் காண வந்த சேரனிடம் மலைவாழ் குறவர் தாம் வேங்கைக் கானலில் கண்ட கண்ணகியார் பற்றி அறிவித்தனர். செங்குட்டுவன் கண்ணகியார்க்குச் சிலை வடித்துக் கோட்டம் அமைக்க முனைந்தான். வடநாடுசென்று இமயத்தில்கல்லெடுத்துக் கனக விசயர் தலையிலேற்றிக் கங்கைக் கரை வரை துாக்கச் செய்து, நீராட்டிச் சேரநாடு மீண்டு சிலைவடித்துக் கோட்டம் எடுத்தான்,

1 சிலம்பு : கட்டுரை : 185, 2. சிலம்பு : கட்டுரை : 190, 191,