பக்கம்:புதையலும் பேழையும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும், 173

கண்ணகியார் இயற்கை எய்திய சில திங்களுக்குப்பின்னரே குன்றக் குறவர் சேரனிடம் அவரது வருகையை அறிவித்தனர் இமயத்தில் கல் எடுத்துவரச் சேரன் வஞ்சி நகரத்திலிருந்து நீங்கி இமயம் சென்று கல்லைத் தேர்ந்து எடுத்துக் கங்கையாற்றில் நீராட்டிக் கரையில் தங்கியிருந்த நாளில் காலத்தைக் கணித் துரைக்கும் கணி எழுத்து,

'எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது ?

- என்றான். எனவே, இந்த இடைக்காலம் 32 திங்கள்கள் ஆகின்றது. பின்னர் வட நாட்டினின்றும் வஞ்சி நகர் மீண்டு சிலை வடித்துக் கோட்டம் அமைக்க 30 திங்களேனும் ஆகியிருக்கும். எனவே, கண்ணகி மறைவிற்குப் பின்னர் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னரே கண்ணகியார் கோட்டம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாகின்றது.

தேவந்தி நடந்த வழி.

கோட்டம் அமைந்த செய்தி சோழ நாட்டிலும் பரவியது. கண்ணகியாரின் வளர்ப்புத்தாயாகிய காவற்பெண்டு, தோழியாகிய தேவந்தி முதலியோர் கண்ணகியார் கோட்டம் சென்று கண்ணகியார் சிலையைக் கண்டு வழிபடும் ஆர்வத்தில் புறப்பட் டனர். இச்செய்தியைச் சிலப்பதிகாரத்து வாழ்த்துரை காதை யின் முன்னுரையாக அமைந்த உரைப்பாட்டு மடை பின்வருமாறு அறிவிக்கின்றது :

"... ... ... ... ... காவற் பெண்டும் அடித் தோழியும் கடவுட் சாத்தனுடன் உறைந்த தேவந்தி யும் உடன் கூடிச் சேயிழையைக் (கண்ணகியாரைக் காண்டும் என்று மதுரை மாநகர் புகுந்து, முலைப் பூசல் கேட்டாங்கு அடைக்கலம் இழந்து உயிரிழந்த இடைக்குல மகள் (மாதரி) இடம் எய்தி, (ஐயை யோடும்) வையையொரு வழிக் கொண்டு,

1. சிலம்பு : தீர்ப்படை : 149,