பக்கம்:புதையலும் பேழையும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - புதையலும்

மாமலைமீமிசை யேறிக் கோமகள்தன் கோயில் புக்கு நங்கைக்கு சிறப்பயர்ந்த செங்குட்டுவன் திறம் உரைப்பர்மன்'

இப்பகுதியில் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளவை கவனத்திற் கொள்ளத் தக்கவை. காவற்பெண்டு முதலியோர் கண்ணகிப் படிமத்தைக் காணப் புறப்பட்டனர். மாதரி மகள் ஐயையை (வழிகாட்டுதற்காகவும்) உடன் கூட்டிக் கொண்டனர். கண்ணகியார் சென்ற வழியாம் வையைக் கரையை வழியாகக் கொண்டனர். மலையின் உச்சியில் ஏறினர். (அங்கிருந்த) கண்ணகியார் கோட்டத்துள் புகுந்தனர்' என்னும் இவை கண்ணகியார் வையை வழியே சென்றேறிய இடம் சுருளிமலை வேங்கைக் கானல் என்பதை உறுதி செய்கின்றன. மேலும் அங்கேதான் கண்ணகிக் கோட்டம் இருந்தது என்பதை இறுதித் தொடர் சுட்டுகின்றது. இக்கோட்டமே மங்கல தேவிக்கோட்டம்’ என்னும் பெயரால் பிற்கால மக்களால் வழங்கப்பட்டது. 'மங்கலதேவி' என்பது கண்ணகியாரையே குறிக்கும்.

கண்ணகிக் கோட்டம் மங்கலதேவிக் கோட்டம்' LDIE1560 என்ற பெயருடன் வரந்தருகாதையில், தேவிக் "மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் கோட்டம். செங்கோ டுயர்வரைசேணுயர் சிலம்பில்' -எனவும்

'மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்

அங்குறை மறையோ னாகத் தோன்றி -எனவும் இரண்டு இடங்களில் குறிக்கப்படுவதும் நினைக்கத்தக்கது. இம்மங்கலதேவிக் கோட்டமாம் கண்ணகியார் கோட்டமே இது போது இடிபாடுகளோடு காணப்படும் சின்னங்கள், கல்வெட்டு கள் எல்லாம் 'இதுதான் சேரன் அமைத்த இமயக் கற்சிலைக் கோட்டம்' என்பதற்குச் சான்றுகளாக நிற்கின்றன.

1. சிலம்பு : வரந்தரு : 58, 54 ; 88, 89