பக்கம்:புதையலும் பேழையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 175

- மேலும், இக்கண்ணகியார் கோட்டம் காலப் கோவலன் போக்கில் விரிவடைந்துள்ளது. இக்கோட்டம் அடக்கம். அமைந்த பரப்பில் மேலும் கோட்டங்கள் பக்கத்

- தில் எடுக்கப்பட்டுள்ளன. கண்ண கியார் கோட்டத்தின் பக்கத்தில் அடக்க மேடை (சமாதி) அமைப்பான சிறு கோட்டங்கள் இடிபாடுகளுடன் தென்படுகின்றன. இவற் றில் ஒன்று கோவலனது நினைவாக அமைக்கப்பட்டதாகலாம். இதற்கு இயைபான கருத்து மணிமேகலைக் காப்பியத்தில் உள்ளது. - -

கண்ணகிக் கோட்டத்திற்கு மணிமேகலை வந்தாள் இதனை அறிவிக்கும் மணிமேகலைக் காப்பிய அடிகள் ஒரு புதுச் செய்தியையும் தருகின்றன. அது கோவலனுக்கும் படிமம் அமைக்கப்பட்டது என்பதாம். அக்காப்பியத்து வஞ்சிமாநகர் புக்க காதையின் தொடக்கத்தில், மணிமேகலை,

'தனியாக் காதல் தாய்கண் ணகியையும்

கொடைகெழு தாதை கோவலன் தன்னையும் கடவுள் எழுதிய படிமங் காணிய வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து

வணங்கி நின்று குணம்பல ஏத்தி'னாள்!

இதுகொண்டு, கண்ணகிக் கோட்டம் எடுக்கப்பட்டதற்குப் பின்னர், சேரன் செங்குட்டுவனாலோ பிறர் எவராலோ அக் கோட்டத்திலேயே கோவலனுக்கும் படிமம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். -

இவ்வாறு, பல்வகைப் பொருத்தங்களும் சான்றுகளும் கூடிநிற்கும் சுருளி மலை மங்கலதேவிக் கோட்டமே நெடுவேன் குன்றத்துக் கண்ணகிக் கோட்டம் எனக் கொள்ள வைக்கின்றது

AASAASAASAASAAAS

1 மணி : வஞ்சிமாநகர் : 2-5