பக்கம்:புதையலும் பேழையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 புதையலும்

கிரங்கனூர்ப் பகவதிக் கோவில்.

கேரள ஆராய்ச்சியாளர் காட்டும் கிரங்கனூர்ப் பகவதிக் கோவில் எவ்வகைச் சான்றுகளுடன் கண்ணகிக் கோட்டமாகக் (இமயக் கல்லில் சிலையமைத்த கோட்டமாகக்) கொள்ளப்பட்டது என்பதற்கு விளக்கம் வெளிவரவில்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்திகளாலும் அப்பக்கத்துக் கதை வழக்காலும் கொள்ளப்பட்டுள்ளது.

கேரள ஆய்வாளர் கருத்திற்கும், தமிழக ஆய்வாளர் கருத்திற்கும் ஒரு பெரிய முரண்பாடு உள்ளது. அது மலைக் கும் மடுவிற்கும் உள்ள முரண்பாடாகும். ஆம்; கேரளத்தார் அறிவிக்கும் பகவதிக் கோவில் உள்ள கிரங்கனூர் நிலமட்டத் தில் உள்ளது. தமிழறிஞர் அறிவிக்கும் மங்கலதேவிக் கோட்டம் மலையுச்சியில் உள்ளது. இது மலைக்கும் மடுவிற்கும் உள்ள முரண்பாடு அன்றோ ? .

இம்முரண்பாட்டின் முடிபு காண இரண்டு வினாக்கள் எழுதல் இயல்பு.

கண்ணகிக் கோட்டம் அமைந்த இடம்,

நிலமட்டமா ?

மலை உச்சியா?

இவ்விரு வினாக்களுக்குக் கிடைக்கும் ஒரு விடை

ஆராய்ச்சியின் முடிவிற்கு உறுதி கூட்டும்.

மலைமுகட்டிற்குச் சான்றுகள் ஆறு.

சிலப்பதிகாரம் விடை கூறுகின்றது. காவற்பெண்டு,

தேவந்தி முதலியோர் கண்ணகிக் கோட்டம் காணவந்த

செய்தியை அறிவிக்கும் உரைப்பாட்டு மடையில் விடை துவங்கு கின்றது. .

1 வையையொரு வழிக்கொண்டு மாமலை மீமிசை

கோமகள்தன் கோயில் புக்கு" யேறிக்