பக்கம்:புதையலும் பேழையும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 177

- -இத்தொடர் குறிக்கும் கருத்து மலைமீது கண்ணகியார்க்குக் கோவில் இருந்தது; அதிற் புகுந்தனர்' என்பதன்றோ? இந்த 'மாமலை மீமிசை கோமகள்தன் கோயில்' என்பது மலைமேல்தான் கண்ணகிக் கோட்டம் இருந்தது என்பதற்கு முதற் சான்று.

இத்தொடரைத் தொடர்ந்து வரும்,

w * : * * 影 * . . * 拳 2 'நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவன் திறம்

உரைப்பர்மன்' . -என்னும் தொடர் அவர்கள் வந்த போது 'அம்மலைமேல் கோட்டத்தில் சேரன் செங்குட்டுவனும் இருந்தான் என அறிவிக்கின்றது. பின்னரும் வரந்தருகாதையில்,

"தெய்வமுற் றெழுந்த தேவந் திகைதான்

கொய்தளிர் குறிஞ்சிக் கோமகன் தன்முன்

கடவுண் மங்கலங் காணிய வந்த

மடமொழி நல்லார்' எனத் தேவந்தி கூறுவதாக உள்ளது.

'குறிஞ்சிக் கோமான் (மலையரசன் செங்குட்டுவன்) முன் கடவுள் மங்கலம்' -என இங்கே குறிக்கப்படுவதும் சேரன் மலை மீது கண்ணகிக் கோட்டத்தில் இருந்தான்' என்பதைக் காட்டு கின்றது. இம்மலைமேல் கண்ணகிக் கோட்டத்தில் நிற்கும் செங்குட்டுவன், கண்ணகியாரது மின்னொளிக் காட்சியைக் காண் கின்றான். கண்டு வியந்து பேசுகின்றான்:

'பொன்னஞ் சிலம்பில் புனைமே கலைவளைக்கை மின்னுக் கொடியொன்றுமீ விசும்பில்தோன்றுமால்'

  • -என்னும் அடிகள் பொன்போன்ற அழகிய மலையில் கண்ணகியாரது காட்சியைக் கண்டதாக குறிக்கின்றது. மலைமேல்தான் கண்ணகி யார் கோட்டம்இருந்தது என்பதற்கு இஃது இரண்டாவதுசான்று.

1 சிலம்பு : வரந்தருகாதை 45-48 2 சிலப்பு : வாழ்த்து : செய்யுள் 9,

புே. 12