பக்கம்:புதையலும் பேழையும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 புதையலும்

(3) இதைத் தொடர்ந்து, கண்ணகியாரது வான்நிழல் மொழியாக, -

வென்வேலான் குன்றில் விளையாட்டு யான்

- அகலேன்'!

-என்று குறிக்கப் படுகின்றது. இங்கும் நெடுவேள் (வென்வேலான்) குன்றின் மேல் (கோட்டத்தில்) எனப்படுவது மூன்றாவது சான்று.

(4) வரந்தருகாதையில் தேவந்தி தெய்வமுற்றுப்

பேசுகின்றாள்:

'மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்

செங்கோட்டு உயர்வரை சேணுயர் சிலம்பில்

பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய

அணிகயம் பல உள'?

-என்னும் இவ்வடிகளில்

கண்ணகியார்க்குக் கோட்டம் அமைத்த மலை கேராக உயர்ந்த உச்சியை உடைய மலை' என்று குறிக்கப்படுகின்றது. இது, நான்காவது சான்று.

(5) இம்மலைப் பகுதியில் பல அழகிய சிறு நீர்ச்சுனைகள் இருந்தன என்பதை 'அணிகம் பல உள’ என்பதனால் அறிகின்றோம். இதற்கேற்பச் சுருளிமலை மேல் இன்றும் நீர்ச் சுனைகள் காணப்படுகின்றன. இஃது ஐந்தாவது சான்று.

(6) சிலப்பதிகாரம் நிறைவேற்றும் இறுதிப் பகுதியில் மலைமேல் நிற்கும் சேரன் செங்குட்டுவன்,

'பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்துத்

தேவந் திகையைச் (வழிபாடு) செய்கென் றருளி

வலமுற மும்முறை வந்தனன் வணங்கி' நின்றான் எனப்படுகின்றது. இது மலைமேல் நின்று சொல்லிய தாகலின், இஃது ஆறாவது சான்று.

1 சிலம்பு வாழ்த்து செய்யுள் 10, 2 சிலம்பு: வரந்தரு : 53-56, 8 சிலம்பு : வரந்தரு : 151-155,