பக்கம்:புதையலும் பேழையும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 179

இவ் ஆறு அகச்சான்றுகளையும் தொடர்புடன் நோக்குங் கால் 'கண்ணகியார் கோட்டம் மலைமேல் எடுக்கப்பட்டதே' என்பது உறுதியாகின்றது.

கிரங்கனூர் அன்று. கேரளத்தார் கூறும் கிரங்கனூர் மலைப்பகுதியன்று. அவ்வூர்க்கு 20 கல் தொலைவிலேயே மலை உள்ளது. அம்மலை

மேல், குறிக்கப்படும் பகவதி கோவில் இல்லை எனவே எவ்வகை யிலும் கிரங்கனூர் ஈடுகொடுக்க இயலாததாகின்றது.

- மற்றொன்றும் இங்கே நோக்கத்தக்கது. சேரன் சென்று செங்குட்டுவன் முன்னர் மலைவளங் காண ச் வகுத்தான். சென்ற செய்தி அது. அவன் வஞ்சிமாநகரி லிருந்து புறப்பட்டுக் கிழக்கே செல்பவன் யானை முதலிய கூட்டத்துடன் சென்றதால் மடிப்பு மலைகளை ஏறிக் கடக்காமல் பள்ளத்தாக்குகளின் வழியாக வளைந்து வளைந்து நெடுந்தொலைவு கடந்து மலைமேல் ஏறினான். அவன் சென்றதை, -

'பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கிண்டி வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்'

-எள இளங்கோவடிகள் அறிவிக்கின்றார். நீங்கிச் செல்வோன்' என்பது கொண்டு இதனை ஒரு பயணமாகவே கொள்ள வேண்டும். இதனை (செல்வோன் என்பதை) மனத்திற் கொண்டு பின்னர் வரும் கண்ணகிக் கோட்டத்தில் கண்ணகிச் சிலையினைக் கடவுள் மங்கலம் செய்ய முனைந்த நிகழ்ச்சியோடு காணவேண்டும்.

இமயக் கல்லில் கண்ணகியாரது வடிவம் வடித்தாகி விட்டது. அதற்கெனக் கோட்டமும் எழுப்பியாகிவிட்டது. அதிற் சிலையை நாட்டிக் கடவுள் மங்கலம் செய்ய வேண்டும். இதற்கு முனைந்தான் செங்குட்டுவன். இதனைக் குறிக்கும் சிலப்பதிகாரம்' வஞ்சிமாநகரிலிருந்து சென்று அப்பணியை நிறைவேற்றிய குறிப்பைத் தருகின்றது. செங்குட்டுவன், அந்தணன், ஆசான், பெருங்கணி, -

1. சிலம்பு : காட்சி : 8, 9.