பக்கம்:புதையலும் பேழையும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புதையலும்

'சிறப்புடைக் கம்மியர் தம்முடன் சென்று

'பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து' !

- கடவுள் மங்கலம் செய்ததாகப் பேசுகின்றது. இங்கு "சென்று' என்று குறித்திருப் பதையும் முன்னர் "நீங்கிச் செல்வோன்’ என்றதோடு இணைத்து நோக்கினால் சிலையை நாட்டவும் வஞ்சியிலிருந்து ஒரு பயணம் செய்ததாகவே கொள்ள நேரும். அப்பயணம் எவ்விடம் கருதியது? அண்மையில்உள்ளகிரங்கனூர்க்கு எனக்கொள்ள இயலாது. கண் ணகியார் இயற்கை எய்திய இடத்தில் கோட்டம் எடுப்பது பொருத் தமானது என்னும் கருத்தோடு இயைவதால் அம்மலை நோக்கிய பயணமாகவே கொள்ளலாம். இதற்கு முன்னே கண்டுள்ள கருத்து களோடு பொருத்திப் பார்த்தால் இக்கருத்து வலிந்து கொள்வதா காது. எனவே, 'சென்று' என்னும் சொற்குறிப்பு பக்கத்துணை யாக நின்று கண்ணகிக் கோட்டம் அமைந்தது ேவங்கைக் காணல் அமைந்த நெடுவேள் குன்றமாம் சுருளி மலையே என்பதைக் குறிக்கின்றது. -

இறுதியாகக் கண்ணகியார் சிலையை ஆராயவேண்டும்,

சிலைக் கல்.

இதுபோது காணப்பட்டுள்ள சிலை (சுருளிமலை மீது காணப்பட்டுள்ளது) அமர்ந்த தோற்றமுடையது. அடிப் பீடமும் சேர்த்து 2 அடிக்கும் குறைவான உயரமும், ஒர் அடி அகலமும், முக்கால் அடி பருமனும் கொண்டது. இஃது ஒர் அம்மிக் கல் அளவினதேயாகும். இவ்வளவுக் கல்லை இருவர் தூக்கலாம். நின்ற கோலத்தில் உள்ள கிரங்கனூர்க் கோவில் பகவதிக் சிலைக்கல் இருவர்.எந்நிலையிலும் தூக்கவோ, தாங்கவோ முடியாததாகும்.

மேலும் சுருளிமலைச் சிலையின் அடிப்பகுதியில் ஒரு மூளி உண்டாகி, வேறு வகையான கல் பொருத்தப்பட்டுச் சிலை நிறை வேற்றப்பட்டுள்ளது. ஒரளவு கவனத்தோடு நோக்கினாலும் இதனைக் காண முடிகின்றது. இவ்வாறு நேர்வதற்குக் காரணம் உண்டு.

1. சிலம்பு ! நடுகல் : 218 - 225,