பக்கம்:புதையலும் பேழையும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 புதையலும்

மணி- இனிமையாக ஒலிக்கும் சொல்;

அரண்மனை முற்றத்திலும் திருக்கோவில் மண்டபத்திலும் யானையின் இரு மருங்கிலும் காளையின் கழுத்திலும் தொங்கி ஒலிக்கும் மணியை இலக்கியங்கள் இசைக்கின்றன.

மணி- ஒரு மங்கலச் சொல்;

பாட்டின் முதலில் அமையவேண்டிய மங்கலச் சொற்களின் பட்டியலில் இதையும் அமைத்துப் பாட்டியல் நூல்கள் பகர்கின்றன.

மணி- ஒரு கருஞ்சொல்லுமாகும்: '.

இதற்குக் கருமை என்னும் பொருளை 2 நிகண்டுகள் வகுக்கின்றன.

மணி- ஒரு காலக் கண்ணுடிச் சொல்;

இதனை மணியடித்து நேரத்தைக் காட்டும் 8 மணிப்பொறி நாளெல்லாம் ஒலித்துக்கொண்டுள்ளது.

மணி- உயிருள்ள உடலைத் தோற்றுவிக்கும் சொல்;

இஃது உயிர்களைத்தோற்றுவிக்கும் ஆண், பெண் உறுப்புப்4 பகுதிகளுக்குப் பெயராக அமைந்தது.

இவ்வாறு ஒன்பது வகையான பொருள்களில் விளங்கும் இச் சொல்லுக்கு ஒன்பது என்றொரு பொருளும் அமைந்தி ருப்பது வியப்புக்கு உரியது அன்று. - -

தைலவருக்கச் சருக்கம் என்னும் நூல் ஒன்பதாவது நாளை 'மணிநாள்" என்று குறிக்கின்றது.

1 சீர்பொ ன் பூமணி திங்கள் பரிதி

திகிரி பிறவும். செப்புமங் கலமே' -

-இலக்கண விளக்கம் : பாட்டியல் : 1.1 2 வனப்புனவ மணியும் மெளத்திகமும் (முத்தும்) நீலமும்

திகிரி பிறவும் கண்டையும் (கண் டாமணி) மணியே' 8 “...................... ஒலித்தது சுவரின்

அண்டையில் இருந்த அடிக்கும் மணிப்பொறி" - -

--குடும்ப விளக்கு 79, 80 4 யாழ்ப்பாணத்தகர முதலி, - - -