பக்கம்:புதையலும் பேழையும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

நன்மை மணி :

முத்து மணி :

புதையலும்

வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது’ நாட்டு நன்மை காக்கும் பத்திணிப் பெண்டாய் நின்று நன்மை மணியாகப் பொலிகின்றார்.

'மாசறு பொன்னே, வலம்புரி முத்தே'-என்

னும் வண்ணனையில் முத்துமணியாகக்

ஒளி மணி :

ஒலி மணி :

மங்கல மணி :

காண்கின்றோம்.

மகளிர்க்குரிய பண்பு ஒவ்வொன்றும் ஒவ்

வொரு வண்ண ஒளிஎனலாம். அவ்வண்ண மணி

களாகக் கண்ணகியாரது பண்புகள் ஒளி

விடுகின்றன.

கற்புத் திறத்தால் வைரம்: மதுரையிற் காட்டிய நெஞ்சுரத்தால் வைடூரியம்; பெருங்குணத்துக் காத லால் புட்பராகம். எள்ளி நகையாடியவர்பாலும் இரக்கங் காட்டிய பசுமைக் குணமாம் அருளால் பச்சை மணியாம் மரகதம், தீயன பயிலாத செஞ் சொல்லால் பவளம்; மஞ்சள் கலந்த சிவந்த உடல்நிறத்தால் கோமேதகம், செஞ்சொல் கொண்டு வழக்காடிய திறத்தால் செம்மணியாம் மாணிக்கம். ஆழ்ந்த அடக்க உணர்வால் ஆழ்கடல் முத்து: குடிக்கு ஏற்பட்ட பழிக்கு நஞ்சாய் கின்று பழியைக் கொன் றமையால் நீலம்.

இவ்வாறு ஒன்டான் ஒளிமணியாய் ஒளிர்கின்றார்.

பாண்டியன் அவையில் புகார் நகரின் சிறப்பை விளக்குங்கால் 'வாயிற் கடைமணி நடுநா நடுங்'கிய நிகழ்ச்சியைக் கூறி, பாண்டியன் வாயிலில் 'வாயிலோயே, வாயிலோயே’ என்று கண்டாமணியாக ஒலித்தமையால் ஒலிமணியாய்

ஒலிக்கிறார்.

மங்கலவாழ்த்துப் பாடலில் திருமணம்பெற்று மங்கல அணி அணியப்பெறுகின்றார். மங்கல மடந்தை' எனப் போற்றப்பட்டுத் தாம் சிலையான கோட்டத்திற்கும் 'மங்கல மடந்தைக் கோட்டம்'