பக்கம்:புதையலும் பேழையும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 189

எனும் புகழ்ப் பெயர் பெறச் செய்த மங்கலத்தால் மங்கல மணி.

கால மணி : 'ஆடிக்குட்டத்து அட்டமி ஞான்று' மதுரையைத் தீக்கு இரையாக்கியதாகச் சிலம்பு குறிக்கின்றது. இந் நாட் குறிப்பால் ஒரு பெரும் வரலாற்றுக் கால அறிவிப்பை வழங்கியமையால் கால க் கண்ணாடியாம் மணிப் பொறியாகின்றார்.

கருமணி : மதுரையில் தீமூட்டிக் கரியாக்கியமையால் கருமணி.

உறுப்புமணி: தாய்மைபெறாக்கரு உறுப்பால் உறுப்பு மணி.

ஒன்பது மணிப்பொருள்களிலும் ஒளிரும் கண்ணகியார்

'மணி என்னும் சொல் கொண்ட ஒன்பது என்னும் பொருளுக்கு

ஏற்ப ஒன்பான் காப்பியச் சுவைகளிலும் ஒன்றி நிற்கின்றார்.

இவ்வாறு மணிப்பொருள்கொண்டு கண்ட விரிவான விளக்கத்தால் கண்ணகியார் சிலப்பதிகாரத்தின் மணியான உறுப்பாகின்றார். மணியான உறுப்பிற்கு ஏற்ப அடிகளார் கண்ணகியாரை மணி மணியாய் - பெண்மணியாய் - மணிப் பெண்ணாய் அமைத்துள்ள திறம் ஒரு வியத்தகு பாங்காகத் திகழ் கின்றது. அப்பாங்கை முறையே காண்பது இன்றியமையாத தாகின்றது.

மணிக்கோவைக் கண்ணகியார்.

கண்ணகி கோவலனுக்கு முதல் இரவு. எழு நிலை மாடத்தின் இடைநிலை மாடத்து நிலாமுற்றத்தில் கட்டிலின்மேல் இருவரும் குலாவினர். அக்கட்டில் மணிக்கட்டில். குலவும் கட்டி லிலும் மணி திகழ்ந்தது. கண்ணகியாரது அழகைச் சுவைத்த இன்பத் தினவில் கோவலன் பேசுகின்றான். முதலில் இனிய சொற்களால் அழைக்கின்றான். பொன்னே, முத்தே, மணமே, கரும்பே, தேனே, பாவாய், மருந்தே' என்றெல்லாம் அழைத் தான். இவை யாவும் விளிகள். அடுத்துப் புகழத் தொடங்கினான். "எவ்வாறு புகழ்வேன்; எவ்வாறு புகழ்வேன்' என்று அடுக்கும் புகழ்ச்சி வருகின்றது. அப்புகழ்ச்சியின் தொடக்கத்தில் கண்ணகி யார் மணியாகின்றார்:

1. “ழயன் விதித்தன்ன மணிக்கால் அமளி' - சிலம்பு : மனையறம்.12.