பக்கம்:புதையலும் பேழையும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 191

மணியாகத் தொடங்கி மாமணி ஆகியது; மாமணி திருமாமணியாக வளர்ந்தது; திருமாமணியும் திருத்தகுமாமணி ஆகியது;

அத்துடன் நில்லாமல், திருத்தகு மாமணிக் கொழுந்தாக நிறைந்தது.

இவ்வகையில் கண்ணகியாரை மணி மணியாகச் சிலம்பில் பதித்து மணிக்கோவையாக்கியுள்ளார் அடிகளார்.

மணி மாலை

இம்மணிக்கோவையில் தொடர்ந்து மணிகள் தொடுக்கப் படுகின்றன. கண்ணகியார் தொடர்புள்ளவை மணிகளாகின்றன. அம்மணிகள் கோவையில் தொடுக்கப்பட்டு கோவை, மாலையா கின்றது.

கண்ணகியாரது புகழ் வெளிப்பட்டமைக்கு அடிப்படை

நிகழ்ச்சிகள் இரண்டு.

ஒன்று சிலம்பால் வென்றமை; மற்றொன்று மார்பால் மதுரையை எரித்தமை. இவை இரண்டுமே மணி மணியாக விளக்கம் பெறுகின்றன.

மணிச் சிலம்பு

சிலம்பு பெண்கள் அணியும் காலணி. சிலம்புதல் என்ப தற்கு ஒலித்தல்- எதிரொலித்தல் என்பது பொருள். கலீர் கலீர் என்று ஒலித்தலால் இவ்வணி சிலம்பு’ எனப் பெயர் பெற்றது சிலம்பு மகளிரது கன்னிப் பருவத்திற்கு உரிய அணி. மகளிரது கன்னித் தன்மையின் சின்னம், திருமணத்திற்கு முன்னர் சிலம்பு கழிநோன்பு, என்றொரு நிகழ்ச்சி உண்டு. அதுபோது கன்னிப் பருவங் கழிந்து கற்புப்பருவத்தினை மேற்கொள்வதால் சிலம்பைக் கழற்றிப் பேணி வைப்பர். அதன்பின் பெரும்பாலும் அணியும் பழக்கம் இல்லை.

சிலம்பு அவரவர்தம் செல்வநிலைக்கு ஏற்பச் செய்யப்படும். செம்பாலும், வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்படும். எளிய மக்கள் தோலாலும் புல்லாலும் செய்துகொள்வர், உள்ளே குழலாக