பக்கம்:புதையலும் பேழையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 புதையலும்

உட்கூடாக அமையும். அந்த உட்கூட்டில் ஒலியெழுப்புவதற்காக உள்ளேயரல்கள்-சிறு சிறு உருண்டை வடிவுள்ளவை-இடப்படும். அப்பரல், சிலப்பிற்கு ஏற்பக் கல்பரல், வெள்ளிப்பரல், பொன்பரல், முத்துப் பரல், மாணிக்கப் பரல், என அமையும்,

பாண்டிமாதேவியின் சிலம்பு பொன்னுள் செய்யப்பட்டு முத்துப் பரலை உள்ளே கொண்டது. இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன்,

"யாமுடைச் சிலம்பு முத்துடை அறியே”

- என்ருன். 'அரி என் முல் உள்ளே கிடைக்கும் விதை போன்ற பரல். உள்ளே வெண்மை யான விதையை - அரியைக் கொண்ட காயை வெள் - அரி - காய் வெள்ளரிக்காய் என்பதை அறிவோம். (வெள் வரி' என வழங்கு வதும் உண்டு. )

கண்ணகியாரது சிலம்பு பசும்பொன்னல் செய்யப்பட்டது. உள்ளே மாணிக்கக் கற்களைப் பரலாக - அரியாகக் கொண்டது.

'என்காற் பொற் சிலம்பு மணியுடை அரியே”

- என்றார் கண்ணகியார். ஒன்பது வகை மணிகளுள் இங்கே குறிக்கப்படும் மணி செம் மணியாம் மாணிக்கத்தைக் குறிக்கும்.

எனது சிலம்பின் உட்பரல் மணி என்று கண்ணகியாரை அறிவிக்கச் செய்த இளங்கோவடிகளார், அம் மணி அறிவிப்பை ஒரு முறையோடு நிறுத்தச் செய்தாரல்லர். தொடர்ந்து அடிகளாரே கோவையாக்கினார் :

'அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப, மன்னவன்

வாய்முதல் தெரித்தது மணியே; மணிகண்டு

தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன்”

- என அமைத்தார்.

1 - சிலம்பு : வழக்குரை : 69. 2 சிலம்பு : வழக்குரை : 97. 8 சிலம்பு : வழக்குரை :11, 72,