பக்கம்:புதையலும் பேழையும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - புதையலும்

அதனைக் காணும் முன்னர் முடிச்சைக் கண்டுகொள்ள வேண்டும், அம்முடிச்சு யாது ?

பஞ்சு நூல் ஒழுங்கின்றிப் பின்னிப் பிணைந்துவிட்டால் இழைகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டு சிக்கல் ஆகும். இச் சிக்கல் இறுகிவிட்டால் முடிச்சாகிவிடும். வாழ்விலும், சிக்கலும் முடிச்சும் நேர்வதுண்டு, இலக்கியங்களிலும் பொருள் விளக்கம் ஒழுங்காகாமல் முடிச்சு விழும். வரலாற்றுப் போக்கிலும் இம்முடிச்சு நிறைய விழுவதுண்டு.

வரலாற்றுக் காப்பியம்.

சிலப்பதிகாரம் வரலாற்று அடிப்படை கொண்ட காப்பியம். காப்பியச் சுவை கருதியும், அணிநலங் கருதியும், நாடக உத்தி கருதியும் சில நிகழ்ச்சிகள் நம்பிக்கைக்குப் பொருந்தாதனவாக அமைந்துள்ளன. இது காப்பிய இயல்பு.

தமிழ் நூல்கள் யாவும் வடமொழி நூல்களின் வழி வந்தவை என்று முனகும் பெருமக்கள் எந்நாளிலும் உளர். இவ்வஞ்சப் பேரவா சிலப்பதிகாரத்தில் நிறைவாகச் செல்லுபடியாகவில்லை. அதனால், கதை கட்டுக்கதை; உண்மை வரலாறு கொண்ட தன்று என்று முணகினர். -

இதனைத் தம் வாழ்நாட் காலத்திலேயே உணர்ந்த அடி யார்க்கு நல்லார் வேண்டுமென்றே ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அக்குறிப்பு சிலப்பதிகாரம் கதை’ என்பார்க்குச் செம்மையான மண்டையடி. அக்குறிப்பையும் நூலின் உரையைத் தொடங்கும் முன்னர் அமைந்த உரைப்பாயிரம்’ என்னும் உரைமுன்னுரையில் அமைத்துள்ளார். அஃது இஃது :

"இதனைக் கதையென்றல் வலியுடைத்து என்பார்க்கு அற்றன்று: கதையென்பது பொய்ப்பொருள் புணர்த்துக் கூறுவது; என்னை? கதையெனக் கருதல் செய்யான்; மெய் யெனத் தானுங் கொண்டான்' (சீவகசிந்தாமணி) என்றமை யாலும், வழக்கினுள்ளும் இஃது ஒரு கதை' என்பவாகலானும் 'நாடகக் காப்பியம் (மணிமேகலை) கதை என்பது அல்லது. இனி, அது நல்ல (கதை) புலவராற் பொய்ம்மொழியால் நாட்டப் பட்டு வருவதாகலின், இஃது (சிலப்பதிகாரம்) அவ்வாறன்றி யோனி என்னும் நாடக உறுப்பும் நாடகமும் தழுவி,