பக்கம்:புதையலும் பேழையும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 புதையலும்

'குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பு”ா -என்று ஆன்முலை அறுக்கும் செய்தியைக் குறிக்கின்றது.

ஆடவரை இழந்த மகளிர் மார்பில் அறைந்துகொண்டு ஒலமிடுவர். இப்பழக்கம் இன்றும் உண்டு.

"பந்தரடி மாரடித்து உறவினர்கள் வாய்க்கரிசிப் படிநெற் கொணர்ந்து கொட்ட" என்றொரு தனிப்பாடல் பாடுகின்றது.

புறநானூற்றிலும், போரில் கணவனை இழந்த மகளிர் "முலைபொலியும் மார்பில் கைகளால் அறைந்துகொண்டு ஒல மிட்டனர்” என்றும், மார்பில் கொதிப்பு எழும் அளவு அடித்துக்கொண்டனர்' என்றும் பாடுகின்றது.

ஒரு கன்னிப்பெண். அவளுக்குக் ಹಾಕTಣTir6 # காதல். அவனை அடையத் துடிக்கின்றாள் அவனது தோள்களில் தனது கொங்கைகள் ஞெமுங்குமாறு தழுவிக்கொள்ளத் துடித கின்றாள். அவனைத் தழுவாமல் பருக்கின்ற கொங்கைகள் பயனற்றவை எனக் குமுறுகின்றாள். அவன் இசைந்து வாராது போனாலும் தானே வலியக் கட்டித் தழுவிக்கொள்ளவும் எழுகின்றாள். அஃதும் இயலாத நிலையில் நிலைகொள்ளாது தவிக்கின்றாள். எவ்வாறேனும் தனது கொங்கைகள் அவன் மார்பில் பட்டாகவேண்டும் என்று பதறுகின்றாள். துடிப்போடு வாய்விட்டுப் பாடுகின்றாள்:

'உள்ளே உருகி நைவேனை

உளளோ இலளோ என்னாத

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்

கோவர்த் தனனைக் கண்டக்கால்

  • 1. நீதிநெறிவிளக்கம் : 29,

2 "முலைபொலி ஆகம் உருப்ப நூறி

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர'-புறம் : 25:10–12. , , , ...?