பக்கம்:புதையலும் பேழையும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 201

"திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியம்'

-என்றும்

'கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்' -என்றும் பேசுகின்றது. இப்பகுதி 'தடம், முன்றில் என்னும் இடம் ஆகும். இடத்தைத் திருகல் என்பது பொருந்தாது. எனவே, திருகப்பட்டது இவ்வடிவப்பகுதி அன்று.

அடுத்த பகுதி சதைத் திரட்சியான பகுதி. இது 'கொங்கை, முலை என்றும் மார்பு என்னும் இடத்தில் அமைந்த தால் இடவாகுபெயராக மார்பு என்றும் வழங்கப்படுவது. மேலும், அம்மம், குயம், சேக்கை, கொம்மை, பரம்பு, என்னும் தமிழ்ச் சொற்களை நிகண்டுகள் வகுக்கின்றன. ஆவிற்கு அமைந்த இப்பகுதியை மடி' என வழங்குகின்றோம். முன்னரும் நீதிநெறிவிளக்கப் பாடலும், 'மடிகொன்று பால் கொளலும்' -என்று குறித்தமை கண்டோம். பெண்களுக்கு அமையும் இப் பகுதி சதைத் திரட்சியாதலின், இது கையால் திருகி எடுக்க இயலாதது.

முலைக் கண்.

மூன்றாவது பகுதி தாய்ப்பால் வெளிப்படும் குமிழ் போன்ற பகுதி. இது முலைக்காம்பு, குருக்கண் முலைக்கண்' எனப்படும். ஆவின் பால் வெளியாகும் இப்பகுதியை மடிக் காம்பு என்கின்றோம். இதுபோன்றே திருவரங்கக் கலம்பகம் என்னும் நூல் இப்பகுதியைக் காம்பு’ எனக் குறிக்கின்றது. அடுத்த பெயர் குருக்கண்'. குரு' என்றால் நிறம், கொப்புளம் எனப் பொருள். இவ்வுறுப்பு கொப்புளம் போன்று குமிழாகக் கருநிறத் தோடு பால்சுரக்கும் ஊற்றுக்கண்ணை உடையதால் குருக்கண்' எனப்பட்டது. பால் வெளிப்படச் சிறு துளைபெற்றுக் கண்ணாக இருப்பதால் முலைக்கண்' எனப்பட்டது. இப்பகுதி முலையின் ஈற்றில் அமைந்தபகுதி என்பதையும் விளக்கிப் பிங்கல நிகண்டு,

1 சிலம்பு : மனையறம்படுத்த : 69 2 சிலம்பு : அந்திமாலைச்சிறப்பு : 49 ஐ கச் சொடு பட்டைக் கிழித்துக்

காம்பு துகிலிவை சீறி-பெரியாழ்வார் திருமொழி : 184.