பக்கம்:புதையலும் பேழையும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20% புதையலும்

'சிலிமுகம் சூசகம் ஈற்றுமுலைக் கண்ணே"

-என்று விளக்கத் தோடு குறிக்கின்றது. திவாகரமும்,

சூசகம் சிலீமுகம் முலைக்கண் சொல்லும்”

-என்றும் சூடாமணி நிகண்டு,

"திகழ்முலைக் கண்ணின் நாமம் சிலிமுகம்

சூசகங்கள்' -என்றும் முலைக் கண்ணை முலையின் தனிப்பகுதியாக வடமொழிப் பெயர்களுடன் குறிக்கின்றன.

கலிங்கத்துப் பரணியில் போரில் மார்புப் புண்பட்ட விரரது வலித்துன்பத்தை மறக்கடிக்க அவரவர் மனைவிமார் தழுவிய செய்தியை, -

பொருங்கண் வேலிளைஞர் மார்பின் ஊடுருவு

புண்கள் திர இரு கொங்கையின் கருங்கண் வேதுபட ஒற்றி”*

-என்று முலைக்கண்ணைக் குறிக்கின்றது.

"முலைக்கண்' என்னும் பகுதி இதுதான் என்பதை அடையாளத்துடன் நாம் காணச் சிவபெருமான் காட்சி தருகின்றார். சிவன் நெருப்பு போன்ற சிவந்த உடம்பினர். உடல் முழுதும் வெண்ணிறு தோய்ந்துள்ளது. அதனால், சிவந்தமார்பும் வெண்ணிறமாகப் பொலிந்து. மார்பின் சிவந்த ஒளியை மூடி மறைத்துள்ளது. அம்மார்பில் புள்ளி அளவில் இரண்டு இடங் களில் திருநீறு கலைந்துள்ளது. அப்புள்ளிகளின் வழியே மார் பின் செந்நிற ஒளி பொங்கித் தெரிகின்றது. அப்புள்ளிகள் எவ்

ឲ, 018, - சேந்: தி : மக்கட்பெயர்த் தொகுதி சூடா. நி. மக்கட்பெயர்த் தொகுதி : 90, கலிங் . ப கடைதிறப்பு: 36.

4.