பக்கம்:புதையலும் பேழையும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பேழையும் }ðä

வாறு ஏற்பட்டன என்று மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். காஞ்சிபுரத்தில் ஆற்றுவெள்ளம் பெருக் கெடுத்தது. அதுகண்டு அஞ்சிய உமையம்மையார் சிவனாரை இறுகத் தழுவிக்கொண்டாராம். அம்மையாரது இரண்டு முலைக் க்ண்கள் சிவனார் மார்பில் அழுந்தின. அழுந்திய அவ்விடங்களில் உண்டான சுவடுகளே புள்ளிகள் என நயமாகப் பாடுகின்றார்:

'துடிகொள் நேரிடையாள் சுரிகுழல் மடந்தை

துணைமுலைக்கண்கள் தோய்சுவடு பொடிகொள் வான்றழலிற் புள்ளி போ லிரண்டு

பொங்கொளி தங்கு மார்பினனே -என்பது அப்பாட்டு. இங்கும் கண்ணைக் காணுகின்றோம்.

"முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும்புல்லும்' - - என நாலடியாரிலும், 'முத்துக்கணபோன் முகத்தாலிமுலைக்கண் வீழ'க - - - எனக் கம்பராமாயணமும் இன்னும் பல இலக்கியங்களும் முலைக்கண்ணைத் தனியொரு பகுதியாகக் காட்டிச் செல்கின்றன, இவை யாவும் கொண்டு. "முலைக்கண்' என்றொரு மூன்றாவது பகுதி தனி உறுப்பு போன்று குறிக்கப்படுவதை உணரலாம். -

- சிலப்பதிகாரம் இதனை முலை முகம் என்று குறிக்கின்றது. பெருங்கதை ஆசிரியரும், - -

காமங் கனிந்த கருத்தடங் கண்ணின் இமைதீர் வெம்பனி முலைமுகம் நனைப்ப .

- - எனக் குறியிடுகின்றார். இம் முலைமுகத்தைத்தான் கண்ணகியார் திருகிப் பறித்து எறிந் ததாகக் காண்கின்றோம். சிலப்பதிகாரப் பதிகத்தார்,

திருவா : அருட்பத்து : 3.

நாலடி : 893, - கம்ப சடாயு உயிர்நீத்த படலம் 108. பெருங் . 191, 192. . .