பக்கம்:புதையலும் பேழையும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 புதையலும்

'முத்தார மார்பின் முலை முகம் திருகி” !

- என்று பாட அதற்கு உரைவகுத்த அடியார்க்குநல்லார்,

'தன் முலைத் முகத்தெழுந்த தீயை உண்ணப்பண்ணின பத்தினி” என்று விளக்கினார். வரந்தரு காதையிலும்,

'கவிகெழு கூடல் கதழெரி மண்ட

முலைமுகந் திருகிய மூவா மேனி”

-என இளங்கோவடிகள் பாடுகின்றார்.

கம்பராமாயணத்தில் சூர்ப்பனகையின் மார்பை இலக்குவன் சிதைத்ததைக் குறிக்குமிடத்தே,

"முக்குங் காதும் வெம்முரண் முலைக்கண்களும்

முறையாற் போக்கி” -என முலைக் காம்பாம்

முன் பகுதியையே சிதைத்ததாகக் குறிக்கப்படுவதும் துணைச் சான்றாகின்றது.

கண்ணகியார் இந்நிகழ்ச்சியை நிகழ்த்தியதை அறிவிக்கும் இடத்தில் இளங்கோவடிகள் திருகப்பட்ட பகுதியின் நிறத்தை மனத்திற்கொண்டு சொல்லை அமைத்துள்ளார். மார்பிடத்தில் இப்பகுதி தனி நிறத்தினது. முன்னரும் கலிங்கத்துப் பரணி தருங்கண்' எனக் கருமை நிறமாகக் குறித்ததைக் கண்டோம். இக்குமிழ் கருமை நிறம் கொண்டது. என்பது உண்மையாயினும் இலக்கியங்கள் இதனை ஒரு குறிப்பாகக் காட்டுவதை நினைக்க நேர்கின்றது. இங்கு எடுத்துக்கொண்ட கருத்திற்காகவும் இந் நினைவு வேண்டப்படும் ஒன்றாகின்றது.

"அந்தநறுங் கோங்கின் அரும்பெனலாம் அவ்

魏 & வரும்புக்கு இந்த முகக் கருமை எய்தாதே"

சிலப்பதி : பதிகம் : 88,

சிலம்பு வரந்தரு காதை : 149, 150

கம்ப துர்ப்பனகை : ஒ4 வருண குலாதித்தன் மடல் : கண்ணி 85