பக்கம்:புதையலும் பேழையும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 205

'வட்டவிரு மந்தரத்தை மார்பிற் பதித்திறுகக்

கட்டுமணி ஆணியாற் கண்கறுத்து'

-என்று இவ்வடிகள் இவ்வாறு அப்பகுதியின் கருமை நிறத்தைப் பேசுகின்றன. ... --

இதனை அடிகளார் நீல நிறமெனக்கொண்டு ‘மணி' எனக் குறிக்கின்றார். இங்கேதான் மணி என்னுஞ்சொல் அமைந்து வரலாற்றில் விழுந்த முடிச்சை அவிழ்த்து விடுகின்றது.

'இடமுலை கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா, அலமந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்”

-என்னும் அடிகளை நோக்கினால் கண்ணகியார் இந்நிகழ்ச்சியை எவ்வாறு ஆற்றினார் என்பதை உணரலாம். 'மணிமுலை' என்பதற்கு 'வனமுலை' என்றொரு பாடம் குறிக்கப்பட்டுள்ளது. மட்டார் என்பதன் மோனைக்கு மணி என்பது பொருந்திய மோனையாக அமைவதையும், பிற அடிகளிலும் மோனைகள் பொருத்தமாக அமைந்திருப்பதையும் நோக்கினால் னி என்னும் பாடமே உரியதாகின்றது, மேலும், முன்னர் மணி என்னும் சொல்லைக் கண்ணகியார்க்கும், சிலம்புக்கும் அமைத்த தொடர்பையும் நோக்கவேண்டும்.

இவ்வாறு 'மணி’ என்று அடைமொழியை முலைக்கு அமைப்பது இளங்கோவடிகளார் மட்டும் கைக்கொண்டதன்று

சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்,

"... ... ... ... ... இருஞ்சிலை முத்தம் சேர்த்தித் திருமணி முலையின்'

- -என்று பாடுவதும், அதற்கு

உரை எழுதிய நச்சினார்க்கினியர் 'வானவிற் போலும் முத்து

1 வருண குலாதித்தன் மடல் : 96 2. சிலம்பு : வஞ்சினமாலை : 43, 48, 8 சீவ. சி ; 625,