பக்கம்:புதையலும் பேழையும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - புதையலும்

வடத்தை முலைத்தலையிலே சேர்த்தி என்று விளக்குவதும் இணைத்துப் பொருத்திக் காணத்தக்கன.

இந்த முலைத்தலையின் கருமை நிறம் ஒரளவு நீல நிறங்கலந்தது. நீல மணிபோன்ற கருமை நிறத்தது. இதையொரு வண்ணனையாக,

'காமன் இமை யாமல்வைத்த

கண்கருப்புப் பாய்ந்ததுவோ? வாமமுலைக் கண்கள்

மணிக்கருப்பை என்சொல்வேன்?

-என்று சுப்பிரதீபக் கவிராயர் பாடியுள்ளார். -

இளங்கோவடிகளார் இப்பகுதியை மணி என்ற அடை மொழியோடு குறித்ததை வழிமொழிந்து பாடுவதுபோன்று திருவரங்கக் கலம்பகத்தில் ஒரு பாடல் உள்ளது. அப்பாடல் உடல் உறுப்புகளை மட்டும் தக்க உவமைகளுடன் அடுக்கிக் காட்டும் பாடல். அடிக்குப் பதினான்காக 56 சீர்களைக்கொண்ட அப்பாடலில் நான்கு சீர்களே அடைமொழிகள். மற்றவை யாவும் உறுப்பினைக் குறிக்கும் சொற்களாக அமைந்து ஆசிரியர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரது செய்யுள் ஆற்றலை முழக்குகின்றன. உடல் உறுப்புகளை 32 ஆக, அது அடுக்கிப் பாடுகின்றது. அம்முப்பத்திரண்டு உறுப்புகட்கும் 32 உவமம் பொருட்களை அடுக்கி நிரல் நிறையாக அமைத்துள்ளது.

பாடலின் முன்னடிகள் இரண்டிலும் உவமப்பொருட்கள் அடுக்கப்பட்டுள்ளன. பின்னிரண்டு அடிகளில் உறுப்புகள்விளங்கு கின்றன. - -

'மழை, பிறை, சிலை, வேல், வள்ளை, எள், ...”* - - என முதல் அடியில் உவமை தொடங்கி 'குழல், நுதல், புருவம், விலோசனம் (கண்), காது

1 கூளப்பநாயக்கன் காதல் : கண்ணி 196, 2 திருவரங்கக் கலம்பகம் : 58,