பக்கம்:புதையலும் பேழையும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புேழையும் - - 207

நாசி ... ... ...” - என நிரல் நிரையாக உறுப்பைக் குறிக்கும் சொற்கள் அமைந்துள்ளன. -

இவ்வமைப்பில் கொங்கை ஒரு உறுப்பாகவும் முலைக்கண்' என்பது தனியொரு உறுப்பாகவும் காட்டப்பட்டுள்ளன:

'கூர்உகிர், கொங்கை, சண், வயிறு" இவற்றிற்கு உவமப் பொருளாகக் காட்டப்பட்டுள்ளவை.

"தத்தைவாய், கலசம், மணி, வடபத்திரம் (ஆலஇலை)" கொங்கைக் கண்ணிற்கு உவமமாக மணி கூறப்பட்டுள்ளது.

இப்பாடலாசிரியர் இலக்கிய வழக்கிலும், பேச்சு வழக்கிலும் உள்ள உவமைகளையே பட்டியலிட்டுள்ளார். எனவே முலைக்கண் ணிற்கு மணியை உவமப்பொருளாகக் கூறியது சான்றோர் கை யாண்ட அடிப்பட்ட வழக்கு. இவ் வடிப்பட்ட வழக்கின் முதல்வராக இளங்கோவடிகளார் திகழ்வார் போலும்.

இவ்வுறுப்பு கொண்ட கருநீல நிறத்தாலும், குமிழ் போன்ற

உருண்டை வடிவத்தாலும் மணி போன்றதாகும்.

மணி மார்பு

எனவே, அடிகளார் மணிமுலை' என்று - மணிபோன்ற முலைக்கண்' என்று உவமத்தொகையாக்கிக் குறித்துள்ளார் என்பது விளங்கும். இந்த மணி உவமையை நோக்கினால் கண்ணகியார் சிதைத்துப்பறித்தது முலைக்கண்ணாம் காம்பையே என்பது தெளிவாகும். இக்கருத்துக்குக் கண்காணும் சான்றாகச் சேரன் செங்குட்டுவன் நாட்டிய கண்ணகியார் சிலை உள்ளது. கண்ணகியார் சிலையின் இடது புற மார்பின் காம்புப் பகுதி சிறு சிதைவாகக் காணப்படுகின்றது. -

இவ்வாறமையும் பற்பல சான்றுகளைக் கொண்டு நோக் குங்கால் 'கண்ணகியார் உணர்ச்சிக் குமுறலில் நின்று தம்வலது கை நகங்களால் இடது மார்புக் காம்பை ஆழமாகக் கிள்ளித் திருகிப் பறித்து எறிந்தார்’ என்பதை உணரலாம். இச்செயல் நடக்கக் கூடியதே என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம்,