பக்கம்:புதையலும் பேழையும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 புதையலும்

'மணி' என்னும் சொல் இம்முலைப் பகுதிக்கு அடைமொழி யாக்கப்பட்டமைதான் திருகி எறியப்பட்ட பகுதி இந்த முலைக்கண் எனப்படும் நீல நிறமான குமிழ்ப்பகுதியே என்பதைத் தெளி வாக்குகின்றது. இத்தெளிவால் கண்ணகியார் இவ்வாறு செய் திருக்க இயலாது -கட்டுக்கதை’ என்று போடப்பட்ட முடிச்சும் எடுபடக் காண்கின்றோம். இக்காம்பு நரம்பின் முடிச்சாய் அமைந்தது. இது சிதைக்கப்படின் நெடுநாள் உயிர் வாழ முடியாது. நாளுக்கு நாள் குருதிக் கசிவால் இறக்க நேரிடும். 'கண்ணகியார் பதினான்கு நாள்கள் வேங்கைக் காணலில் இருந்து பின்னர் இயற்கை எய்தினார்’ என்னும் கருத்தும் இயைபாக அமைகின்றது.

நரம்பு முடிச்சாம் முலைக்காம்பை முடிச்சவிழ்த்து விளக்கிக் காட்டும் பாங்கில் மணி’ என்னும் சொல் அமைந்து வரலாற்று முடிச்சை அவிழ்ப்பதும் ஒரு நயமான பொருத்தமே.

இக்கட்டுரையால், 'கண்ணகியார் சிலம்பின் முதன்மை உறுப்பினர்; சிலம்பை உடைத்தமையும், மார்பைச் சிதைத்தமையும்

அவர்தம் பெருமையை வெளிப்படுத்தின; மார் பைச் சிதைத்துக்கொள்வதும் நிகழக்கூடியதே; 'சிலப்பதிகாரம் வரலாற்றுக் காப்பியமே - கட்டுக்கதையன்று' -என்னுங் கருத்துகள் நாட்டப்பட்டுள்ளன. இக்கருத்துகளை 'மணி என்னும் சொல் கருவியாக நின்று வெளிப்படுத்து கின்றது. வரலாற்று ஆய்விற்குச் சொல் ஆய்வு உறுதுணை யாகக் கூடியது என்னும் உண்மையும் புலனாகும்.

வாழ்க மணியான தமிழ்ச் சொற்கள்!