பக்கம்:புதையலும் பேழையும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 215

இலக்கியம் இயற்கையின் எழுத்துப் பதிவு மட்டும் அன்று; இயற்கையின் தொலைக்காட்சிப் பேழை"-என்றேன். இலக்கிய உணர்வுடைய இனிய மாணவர், 'உங்கள் பயணம் இலக்கியப் பயணமாக விளங்குக -என்றார். அஃது உண்மை யாயிற்று.

இவ்விலக்கியப் பயணத்தில் ஒர் இலக்கியக் குடும்பத்தவர் எனக்கு உடன் பயணியாக அமைந்தார். எனது தந்தையார் ஆத்திசூடி உரைகாரர் கோ. வைத்தியலிங்கனார். அவர் உத்தரம் வரை உரை எழுதியவர்' எனத் தமிழவேள் உமாமகேசுவரனாரால் போற்றப்பட்டவர். ஆத்திசூடி உரையின் கையெழுத்துப் படியின் அடுக்கு, உத்தரம் வரை உயர்ந்திருப்பது என்பதால் அவ்வாறு போற்றப்பட்டார். அத்துடன் திருக்கோவையாரைப் பாடஞ் சொல்லும் திறனில் புகழ் பெற்றவர் என் தந்தையார். அத்திறன் கருதியும், என் தந்தையாரது கோ. வை. என்னும் பெயர் எழுத்து களின் இயைபு கொண்டும் பண்டிதமணி மு. கதிரேசனார் காரைக்குடி மன்று ஒன்றில் எனது தந்தையாரைக் கோவையார் என்று சிறப்பித்தார். இருவரும் நண்பர்கள். அப்பண்டித மணியாரது இளைய மகனார் திரு க தியாகராசன் என்னுடன் பயணஞ் செய்தார். இவரும் எம். ஒ. எல், பயின்ற புலவர். இவரது தமையனார் திரு க. மாணிக்கவாசகம் எனது மாணவர் என்பதிலும் ஒரு தொடர்பு உண்டு.

கலத்தின் தலைவர் பழகற்கினியவர்: பண்புடையாளர். தமிழ்ப்புலவர் என்பார் தனிமதிப்புக்குரியவர் எனக் கருதி அளவ ளாவினார். கலத்தில் அமைந்த சிறு நூலகத்திற்கு எனது நூல்களை அன்பளிப்பாக அளித்தேன். தங்களைத் தாங்கிய பெருமையின் அணியாக, என் கலம் தங்கள் நூல்களைச் சூடிக் கொள்ளும்; நன்றி என்ற அவரது உளப்பாங்கு என்ன உவத்தற்குரியது. -

கலம் செல்லும் பாதை மணிமேகலை கண்ட பாதை என் பதன் குறிகள் தென்பட்டன. நீர்ப்பரப்பின் அலையில் தவழ்வது போன்று அலையோடு அலையாக ஒருவகைப் பறவைகள் - ("திரைதவழ் பறவை") தென்படத் தொடங்கின. நேரம் செல்லச் செல்லச் சிறகை விரித்துப் பறக்கும் பறவைகள் ("விரிசிறைப் பறவைகள்') உயரே அலைந்தன. சிறகடித்தபடியே வானில் நின்று மீனைப் பிடிக்க நீரில் விழும் மீன்கொத்திப் பறவை இனம்