பக்கம்:புதையலும் பேழையும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 219

'வேலா வலய முந்நீர் மேய்ந்து

. . கருக்கொண்ட முகில் காலமுறை ஊன்றி அந்தக் காலமுறை

காட்டியதே' -என்றார். இவ்வாறே புலவர் பலரும் யான் கண்ட காட்சியைச் சூழ்ந்து நின்று பேசுவதாக உணர்ந்தேன். புலவனாகிய யான் இவ்வாறு புலவர்களைக் கடல் நடுவே ஒன்றுகூட்டிக் கண்டது கற்பனையாக இருக்கலாம். புலவர்களால் ஒருமுகமாகப் பாடப் பட்டுள்ள செய்தி கற்பனையன்று என்பதை யான் கண்ட காட்சி பதிப்பித்துக் காட்டியது. -

வென்முகில் கடல் நீரில் படிந்து தண்ணிரைக் குடித்துக் கருநிறம் பெற்று மேலே எழும்' - என்ற அடிப் பட்ட கருத்தை வண்ணனையாகவே கருதி வந்தோம். இதனை அப்பட்டமான உண்மையாகக் கண்டேன். கண்ட காட்சியை அப்பாங்கிலேயே எழுதி மகிழ்வேன்:

காட்சி ஏறத்தாழ நான்கு கல் தொலைவில் தெரிந்தது:

அவிழ்ந்த பஞ்சுப் பொதி போன்ற வெண்முகிற்கூட்டம் கடல்மட்டத்தினின்றும் ஏறத்தாழ ஒரு கல் உயரத்தில் குழுமித் தொகுதியாகத் தெரிந்தது.

அதன் மையமான அடிப்புறத்தினின்று ஒரு கால் இறங் கியது. இறங்கும் தொடக்கத்தில் ஆவின் பால்மடிக் காம்பு ஒன்றைப் போன்று கட்சியளித்தது. அஃது ஆலம் விழுது போன்று வளர்ந்தது.

வாத்து இறங்கிக் தடல்மட்-தின் கால்சக்க காலும் வெண்மை நிறமாகக் காட்சியளித்தது. -

இஃது இரண்டு, மூன்று மணித்துளி அளவில் நிகழ்ந்தது .

1 முக்க. ப. 37.