பக்கம்:புதையலும் பேழையும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 228.

எனவே, காட்சியின் ஒற்றுமையைக் காணின் நீர் குடித்த முகிலைக் காரானை என்றது பொருத்தமே. யானை, ஆனை என்று மருவிய பிற்காலத்தில் உருவானதே 'காரானை (கார் ஆனை) என்னும் சொல். அதனால் இச்சொல் பண்டை இலக்கியங் களில் இல்லை. - -

இச்சொல் இலக்கியத்தில் இல்லையேயன்றி, நீர் பருகும் முகிலுக்கு உவமையாக யானையைக் குறிக்கும் மரபு இருந்ததைக் காணலாம் :

'நெய்யணி குஞ்சரம் போல் இருங்கொண்மூ வைகலும் ஏரும் வலம்' - -

- என்கிறது கார் நாற்பது (12). நீருண்டு கருத்த கார் சூல் கொண்டு மினுமினுப்புற்றுத் தோன்றுதற்கு ஏற்ப, நெய் பூசிய யானையாகக் குறித்ததில் நயமும் கண் சிமிட்டுகிறது. -

திருத்தக்கதேவர், -

"இலங்கல் ஆழியின்ை (மன்னர் மன்னன்)

களிற்று ஈட்டம்போல்

கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை" - என யானைக் கூட்டத்தையே உவமையாக்கினார்.

இவ்வாறு யானை - ஆனை போன்ற தோற்றத்தால் கார், 'காரானை' என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. எனவே, "கார் - ஆனை என்பது கருப்பு யானை என்பதன்றிக் காராகிய யானை' எனக் காரையே குறிப்பதாயிற்று.

இச்சொல் இன்றும் இப்பொருளில் இலங்கை - யாழ்ப் பாணத்தில் வழக்கில்உள்ளது. பிற்கால அகரமுதலிகள் சிலவற்றில் காரானை இப்பொருளுடன் இடம் பெற்றுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்து அகரமுதலி பதிப்பில் இச்சொல், வழக்குச் சொல்லாகக் காட்டப்பட்டு, அதற்கு, 'காரான - கடலின் மீது குவிந்து கீழிறங்கிநீரைமுகந்து

பெருந்துாண்போல நிற்கும் மேகம்'?

- எனப்பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.

1 சீவ : சி :32, 2 TAMIL LEXICON 1 885