பக்கம்:புதையலும் பேழையும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமைத் தமிழில் இறை வழிபாடு.

உணர்ச்சி வடிவம்.

'இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலிய பாசைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட் டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மன்ம்பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பலவிதத் தோத்திரப் பாடல்களைப் பாடுவித்தருளினிர் 1

மேற்காணப்படுவது கருத்துரை நல்கவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுதப்பட்டதன்று. இறைவனிடம் பேசும் உணர் வில் எழுந்தது. ஒரு பட்டறிவின் அடிப்படைக் கருத்து இது.

இவ்வாறு எழுதியவர் தாம் வெளிபடுத்தும் கூற்றின் தன்மையை, - -

"வாய்மட்டிற் சொல்லுகின்ற வார்த்தையன்று; இது என் மனமொத்துச் சொல்லுகின்ற வாய்மை" . . . . . . . - என்று விளக்கியவர்.

1 சத்தியப்பெரு விண்ணப்பம் : 2