பக்கம்:புதையலும் பேழையும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 229

களையும் சிவபெருமான் உமையம்மைக்கு அருளினான் என்ப தாகத் திருமூலர் திருமந்திரம், .

"ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே'

. -என்று பேசுகின்றது. இவ்விரண்டு அடிகளும் ஆகமச் சிறப்பைக் கூறும் பகுதியில் உள்ளவை. இதன் மூலம் தமிழும் ஆரியமும் ஆகம மொழிகளே என்பதனைத் திருமூலர் உணர்த்தியுள்ளார். 'ஆகமம் என்பது 'முதல்வனது மொழி என்றும், சான்றுக்குரிய அறமொழி' என்றும் பொருள்படும். எனவே, தமிழும் ஆரியமும் முதல்வனது மொழிகள்; சமயத் தொடர்பில் சான்றுக்குரிய மொழிகள் என்று ஆகின்றன. சமயத் துறையினர் ஒருபடி மேலே சென்று இவ்விரண்டு மொழிகளும் இறைவனது இரண்டு கண்கள் என்பர். அதனினும் மேலே சென்று இறைவன் இவ்விரு மொழி களாகவே உள்ளான் என்று சமயச் சான்றோர் பாடியுள்ளனர்:

இறைவன்,

"ஆரியந் தமிழோடு இசையானவன்” என்றும்

வானவன்காண் வானவர்க்கும் மேலா னோன் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்” -என்றும் திருநாவுக்கரசர் உள்ளம் குழைந்து அறிவிக்கின்றார்.

செந்திறத்த தமிழோசை வடசொல் συπαξ"4 -என்று திருமங்கையாழ்வாரும் தம் திருநெடுந்தாண்டகத்தில் அறிவித்துள்ளார். - . . . . . . . . . . . . . . . . .

இவ்வாறே இவ்விரு மொழிகளையும் இணைத்தும் தனித் தும் இறைவனோடு தொடர்புபடுத்திப் பலஅருமறை ஆன்றோரும்

1 திருமந் : ஆகமச் சிறப்பு : 9. 2 அப், தே; திருக்கடம் : 3 : 1. 3 அப், தே: திருச்சிவபுரம்: 1 : 1. 4 நாலா : திருநெடு : 4 : 2