பக்கம்:புதையலும் பேழையும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 புதையலும்

சமயச் சான்றோரும், சிற்றிலக்கிய நூலாரும், தனிப் பாடல்தந் தோரும் பாடியுள்ளனர். இவை கொண்டு தமிழும் ஆரியமும் இறைவனுக்கு உகந்தமொழிகள் என்பது அறியப்படும். இரண்டும் பாடிப் பரவுதற்கு உரிய தகுதி வாய்ந்தவை; போற்றித் தொழு வதற்குரிய ஏற்றங் கொண்டவை; அருச்சித்து வழிபடற்குரிய மந்திரமானவையாகும். இரண்டும் தெய்வ மொழிகளே எனலாம்

- இவ்வாறிருந்தும், 'இவ்விரு மொழிகளிலும் ஆரிய மொழி ஒன்றுமே மறைமொழி; அதன்கண் உள்ளனவே மந்திரங்கள்; அஃதொன்றே அருச்சனை செய்து வழிபடற்குரியது; எனவே ஆரிய மொழியே தெய்வ மொழி-தேவ பாடை என்று தமிழர்களே நம்பும் நிலை வந்தது. கோவில்களில் இறைவன் திரு முன் அணுக்க மொழியாய் ஆரியமாம் வடமொழியே நடைமுறை மொழி யாயிற்று. அசைக்க முடியாமல் நிலை பெற்றது. தமிழர்தம் குறைபாட்டால் நேர்ந்த வியப்புகளில் இஃதும் ஒன்று.

தமிழ்நாட்டில் தமிழர் எழுப்பிய கோவில்களில், தமிழர் வழிபடுதற்குத் தமிழ் இல்லை என்பதை வியப்பு என்று குறிக்க வேண்டும். அல்லது, -

"காற்செருப்பைப் பிறனொருவன்

கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம் மேற்படுத்தும் எவற்றினுக்கும்

மேற்பட்ட தென்மொழியைத் தமிழைத் தீயோர் போற்றுவதற் குரியதொரு

பொதுவினின்று நீக்கி வைத்தால் பொறுப்பது துண்டோ?” - - என்று பாவேந்தர் உணர்வில் நின்று பொறுக்க இயலாத நிலை என்று கூற

வேண்டும்.

1 தமிழியக்கம்