பக்கம்:புதையலும் பேழையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புதையலும்

பாட்டின் முதலில் அம்மா என்னும் சொல்லினைப் பா வேந்தன் அமைத்து, அது முதற்சொல் என்பதனைக் குறிப்பில் கொள்ள வைத்தார். இயற்கையின் செறிவினாலே இம் மாநிலத்தை ஆண்ட இயற்றமிழ்’ என்று தமிழ் இயற்கைப் போக்கில் தோன்றிய மொழி என்பதைக் காட்டினார். தமிழை “ஆதிசிவன் பெற்றுவிட்டான்" என்பது போன்ற கதைக்கருத்தை தயமாக மறுப்பவராய்ச் கம்மாதான் சொன்னார், உன்னை ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே எனக் குறித்தார்.

மேலைநாட்டு மொழியியல் அறிஞர் எர்டர் என்பார், மொழியை காந்தன் தோற்றுவிக்கவில்லை; இயற்கையில் தோன்றியது' என்றார். இக்கருத்தை, மாந்தன் மொழியைத் திட்டமிட்டு வலிந்து உண்டாக்கவில்லை; மாந்த உயிரினத்தின் உறுப்பு இயங்கும் இயற்கைப் போக்கில் மொழி தோன்றியது” என்னும் கருத்தில் கொள்ளலாம். இக்கருத்து எல்லா மொழி களுக்கும் பொகுத்தாது. மிகத் தொன்மை வாய்ந்த சில மொழி களுக்கே பெருந்தும். நம் தமிழுக்கு நூற்றுக்குதுன்று பொருந்தும்,

இயற்றமிழ் (இயல் + தமிழ்) என்னும் சொல்லமைப்பே தமிழ் இயற்கைப் போக்கில் இயங்கத் துவங்கிய மொழி என்னும் உண்மையைச் சோல்கின்றது. அம்மா என்னும் சொல் இவ் புண்மைக்கு முதற் சான்றாய்த் திகழ்கின்றது. இச்சொல்லின் வழக்காற்றையும் வரலாற்றையும் காண்போம். .

வழககாறு 'அம்மா' அழைக்கும்-விளிக்கும் பொருளைத் தரும்சொல்.

அவ் விளிப் பொருளோடு இச்சொல் இக்காலத்தில் பல முனை களில் வழங்கப்படுகிறது. - 'அம்மா-எனக் குழந்தை தன் தாயை அழைக்கின்றது. 'அம்மா-என எப்பருவத்தினரும் தம் தாயை அழைக்கின்றனர். அம்மா-என எவரும் தாய் முறையில்லாது எத்தாயரையும்

- . . . . . - அழைக்கின்றனர். 'அம்மா-எனஎவரும் எப்பருவப்பெண்டிரையும் அழைக்கின்றனர்.