பக்கம்:புதையலும் பேழையும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 புதையலும்

'மந்திரம் கொண்டு வழிபடு வோர்க்குச் சுந்தர நாதன் சொல்லிய மந்திர” -

  1. -மாம் 'மந்திரம் முந் நூறு' என்னும் நூல் எழுந்தது. சுந்தரநாதன் என்னும் இயற் பெயரையுடைய திருமூலர் இந்நூலை உரைத்தார் என்பதை,

"முலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்" - -என்று திருமந்திர இறுதிப் பாடல் அறிவிக்கின்றது. இவ்வாறு ஒருநூல் உருவான தைக் கொண்டு இறைவழி பாட்டில் வடமொழி ஆட்சிக்கு மாற்றாக அக்காலத்திலேயே ஒர் உணர்வு எழுந்ததாகவும் கொள்ளலாம்.

தமிழ்ப் போற்றி நூல்கள் - தமிழ் மந்திர நூல்கள்-உருப்போடும் பனுவல்கள் பல முன்காலத்தில் இருந்தன. அவற்றைக் கடல் கொண்டது. இதனை,

"ஏரணம் உருவம் யோகம்

இசைகணக் கிரதம் சாலம் தாரணம் மறமே சந்தம்

தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன

மானநூல் யாவும் வாரி வாரணம் (கடல்) கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள' - -என்னும் பாட்டு குறிக் கின்றது.

இப்பாடலின் முதலடியில் குறிக்கப்பட்டுள்ள ' உருவம்'

என்பது ஒருவகை நூல். இது உருப்போடும் மந்திரத்தைக் குறிப்பது. மீண்டும் மீண்டும் உருப்போடப்படும் இறைமொழி

1 மந்திரம் முந்நூறு: சிறப்புப்பாயிரம். 2 திருமந் : 8048.